சத்தியமார்க்கத்தின் இலட்சனங்கள் -பண்புகள்- யாவை?

சத்தியமார்க்கமானது இடைத்தரகர்களின் எந்த ஒரு தலையீடுமின்றி படைப்பாளனுடன் மாத்திரம் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடிய மனிதனின் முதல்-ஆரம்ப- உள்ளுணர்வுடன் இணங்கிச் செல்வதாக இருப்பதுடன் மனிதனில் நற்பண்புகளையும் சிறந்த குண இயல்புகளையும் பிரதிபலிக்க வேண்டும்.

அது எல்லா இடத்திற்கும் காலத்திற்கும் பொருத்தமாக இருப்பதோடு இலகுவானதாகவும் எளிமையானதாகவும், புரிந்து கொள்ளக் கூடியதாகவும், சிக்கலற்றதாகவும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு காலத்திலும் மனித தேவைகேற்ப சட்டங்களின் பன்முகத்தன்மையை அங்கீகரித்து, எல்லா வகையான மனிதர்களுக்கும் தேசத்திற்கும், பரம்பரையினருக்குமான உறுதியான மார்க்கமாக இருக்க வேண்டும். பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளில் உள்ளதைப் போல, மனித விருப்பத்திற்கு ஏற்ப மார்க்கத்தில் ஒரு விடயத்தை அதிகரிப்பதையோ குறைப்பதையோ ஏற்றுக்கொள்ளாத ஒன்றாகவும் இருக்க வேண்டும்.

மார்க்காமனது தெளிவான கோட்பாடுகளை- நம்பிக்கைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். இடைத்தரகர்களின் தேவை இருக்கக் கூடாது. அத்துடன் மார்க்கம் மன உணர்வுகளின் அடிப்படையில் அமையாது சரியான நிரூபிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் அமைந்திருந்தல் வேண்டும்.

மார்க்கமானது வாழ்வின் எல்லா விவகாரங்களையும், இடம் மற்றும் காலம் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருத்தல் வேண்டும். ஈருலகற்கும் பொருத்தமானதாக இருப்பதுடன் ஆன்மாவில் மட்டும் கவனம் செலுத்தி உடலை மறந்திடாமல் இருக்க வேண்டும்.

மார்க்கமானது, மனிதர்களின் உயிர்களையும், அவர்களின் மானங்கள் மற்றும் உடமைகளையும் பாதுகாப்பதுடன் அவர்களின் உரிமைகள் மற்றும் அறிவாற்றலையும் மதித்து நடக்க வேண்டும்.

இயற்கை உள்ளுணர்வுடன் ஒன்றித்து செல்லும் இவ்வழிமுறையை யார் பின்பற்றி ஒழுகவில்லையோ அவன் ஒருவகை குழப்பத்திலும், தடுமாற்றத்திலும் வாழ்வான். ஒரு வகை மனஅழுத்தத்தையும் உணர்வான். இம்மை வாழ்க்கையில் இப்பெடியன்றால் மறுமை வாழ்க்கையில் எவ்வாறிருக்கும்!

PDF