உணவு மற்றும் குடிபானத்திற்கான தேவையை விட மார்க்கத்தின் தேவை மிகவும் அவசியமாகும். அந்த வகையில் மனிதன் இயல்பிலேயே ஒரு மத(மார்க்க)வாதியாவன். எனவே அவன் சத்திய மார்க்கத்தை ஏற்றுப் பின்பற்றவில்லையெனில் மனிதர்கள் கண்டுபிடித்த சிலைவணக்கம் சார்ந்த மதங்களில் நடந்தது போல,அவனும் புதிதாக ஒரு மார்க்கத்தை உருவாக்கிடுவான். அத்துடன் மனிதனைப் பொருத்தவரை அவனின் மரணத்திற்கு பின்னுள்ள வாழ்வில் எப்படி பாதுகாப்பு தேவையோ அதே போல இந்த உலகத்திலும் அவனுக்கு பாதுகாப்புத் தேவையாகும்.
சத்தியமார்க்கமே அதனை ஏற்றுக்கொண்டோருக்கு ஈருலகிலும் பூரண பாதுகாப்பை வழங்குகிறது. இதனை பின்வரும் உதாரணங்களின் மூலம் விளக்க முடியும் :
1- நாம் ஒரு பாதையில் பயணிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அப்பாதை எங்கு சென்று முடிவடைகிறது என்பதை நாம் அறியாதிருந்தால் எமக்கு முன் இரு தெரிவுகள் இருக்கும். ஒன்று பாதையில் போடப்பட்டிருக்கின்ற பதாகைகளின் அறிவுறுத்தல் பிரகாரம் செல்வது, அல்லது யூகித்து செல்ல முயற்சிப்பது. அவ்வாறு யூகித்து செல்வது சில போது இழப்பிற்கும் உயிராபத்திற்கும் வழிவகுத்துவிடலாம் என்பதே உண்மை.
2- நவீன தொலைக்காட்சிக் கருவியொன்றை வாங்கி அதன் அறிவுறுத்தல்களை சரியான முறையில் வாசிக்காது இயக்கினால் அதனை பழுதாக்கி விடுகிறோம். அந்த தொலைக்காட்சி கருவியை உற்பத்தி செய்த அதே நிறுவனம்தான் சரியாக இயக்க வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல் புத்தகத்தையும் வெளியிடுகின்றது என்றால் நாம் அந்த புத்தகத்தின் அறிவுருத்தலின் பிரகாரமே பயன்படுத்துவது- இயக்குவது- அவசியமாகும்.
3- ஒரு நபர் மற்றொரு நபருடன் தொடர்பு கொள்ள விரும்புகிறார் என வைத்துக்கொள்வோம். தொடர்பு கொள்ளப்படவிருக்கும் நபர் மின்னஞ்சல் மூலம் அல்லாது தொலைபேசியில் பேசுமாறு வேண்டிக் கொள்கிறார் என்றால், அவருக்குரிய தனிப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்த வேண்டுமே தவிர அவரால் வேறு எந்த தொலைபேசி எண்ணையும் பயன்படுத்த முடியாது.
மேலே குறிப்பிடப்பட்ட உதாரணங்கள் யாவும் மனிதர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மனோ இச்சைப்படி அல்லாஹ்வை வணங்க முடியாது என்பதை எடுத்துக்காட்டுகிறது. அவ்வாறு நடந்து கொள்வதினால் அவர்கள் மற்றவர்களுக்கு தீங்கிழைக்க முன்னரே தமக்கே தீங்கிழைத்துக்கொள்கிறார்கள். மக்களில் சிலர் அகிலங்களின் இரட்சகனோடு தொடர்பு கொள்ள மதத்தளங்களில் பாட்டு மற்றும் நடனம் ஆகியவற்றில் ஈடுபடுவதை நாம் காண்கிறோம். இன்னும் சிலர் தங்களது மத நம்பிக்கையின் படி கடவுளை விழிக்கச்செய்வதற்கு கைகளை தட்டுகிறார்கள். மேலும் சிலர் அல்லாஹ்வை வணங்க இடைத்தரகர்களை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களின் நிலைப்பாட்டில் அல்லாஹ் மனித உருவத்தில் அல்லது செதுக்கப்பட்ட சிலை வடிவில் பிரதிபலிக்கிறான் என நம்புகிறார்கள். எவ்வித நலனையோ தீங்கையோ எமக்கு விளைவிக்க முடியாத இதுபோன்றவற்றை வணங்கி வழிபட்டு, மறுமையில் எமது அழிவிற்கும் நாசத்திற்கும் காரணமாக இருப்பவற்றிலிருந்து அல்லாஹ் எம்மை பாதுகாக்க விரும்புகிறான். ஆகவே அல்லாஹ்வுடன் அல்லாஹ் அல்லாதவற்றை சேர்த்து வணங்குவது மிகப்பெரும் பாவமாக கருதப்படுவதுடன் இதற்கான தண்டனை நிரந்தர நரகமாகும். நாம் அனைவரும் செல்லக்கூடிய ஒரு கொள்கையை –ஒழுங்கை –எமக்களித்து அதன் மூலம் அவனுடனான எமது தொடர்புகளையும் எம்மை சூழ உள்ளோருடனான தெடர்புகளையும் ஒழுங்குபடுத்திக் கொள்வதற்காக தந்திருப்பது அல்லாஹ்வின் மகத்துவத்தை பறைசாட்டும் விடயமாகும். இதையே நாம் மார்க்கம் என்ற பெயரால் அழைக்கிறோம்.