வெற்றிக்கும் மீட்சிக்குமான வழி என்ன?

ஆக வாழ்க்கைப்பயணத்தின் சிறப்பான மற்றும் பாதுகாப்பான முடிவும் மீட்சிக்கான சிறந்த வழியும் பின்வரும் இறைவசனங்களில் சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. அல்லாஹ் கூறுகிறான் :

"பூமி தன் இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும்; வினைச் சுவடிகள் கொண்டு வந்து வைக்கப்படும், இறைத்தூதரும் அனைத்துச் சாட்சியாளர்களும் கொண்டு வரப்படுவார்கள். மக்கள் மத்தியில் முற்றிலும் நியாயமான வகையில் தீர்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது. மேலும், ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் புரிந்திருந்த செயல்களுக்கேற்ப முழுமையான கூலி வழங்கப்படும். மக்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். (அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக் கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென் பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களா கவும் உங்களிடம் வரவில்லையா? என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) உண்மையில் அவர்கள் (வந்தார்கள்) என்று கூறுவார்கள்; எனினும் வேதனை வாக்கு நிராகரிப்பாளர்கள் மீது உண்மையாகி விட்டது. நரகத்தின் வாயில்களால் நீங்கள் நுழையுங்கள் என்று கூறப்படும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். பெருமையடிப்போரின் தங்குமிடம் மிகவும் கெட்டதாகும். தம் இரட்சகனுக்கு அஞ்சியோர் சுவர்க்கத்தின்பால் கூட்டங் கூட்டமாகக் கொண்டு வரப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் அதனை நெருங்கியதும் அதன் வாயில்கள் முன்னரே திறந்து வைக்கப்பட்டிருக்க அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: 'உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் நல்லவிதமாக இருங்கள். என்றென்றும் நிரந்தரமாக தங்கியிருப்பதற்காக இதில் நுழைந்து விடுங்கள்(என்று அவர்கள் கூறுவார்கள்). தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்த, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்) பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என்று கூறுவார்கள். எனவே நன்மை செய்தோரின் கூலி மிகவும் சிறந்ததாகும்". (அஸ்ஸுமர்: 69-74). تقدم

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை இல்லை என்று சான்று பகர்கின்றேன்.

மேலும், நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனது அடியாரும் தூதருமாவார் என்றும் சான்று பகர்கின்றேன்.

அல்லாஹ்வின் தூதர்கள் உண்மை என சாட்சி கூறுகிறேன்.

சுவர்க்மும் நரகமும் உண்மையானவை என சாட்சி கூறுகிறேன்.

PDF