இஸ்லாமியத் தூது கிடைக்கப் பெறாதோரை அல்லாஹ் ஒருபோதும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால் மறுமையில் அவர்கள் சோதனைக்குட்படுத்தப்படுவார்கள்.
இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாத மனிதர்களுக்கு எந்த நியாயமும் கிடையாது, ஏனென்றால் நாம் குறிப்பிட்டது போல, அவர்கள் அறிவைத் தேடுவதிலும் சிந்திப்பதிலும் கவனயீனமாக இருக்கலாகாது. மேலும் இஸ்லாமியக் கொள்கை சரியானது எனும் சான்று நிறுவப்படுவதும் அதை திட்டப்படுத்திக் கொள்வதும் சிரமம் என்றிருப்பினும் ஒவ்வொரு நபரும் இந்த விடயத்தில் மற்றவரிடமிருந்து வேறுபட்டவர்கள். அறியாமை அல்லது சரியான சான்று கிடைக்காமை போன்றவற்றிற்கான முடிவு மறுமையில் இறை நாட்டத்துடன் தொடர்பான விடயமாகும். இவ்வுலகத்தீர்ப்புகள் யாவும் அவை வெளிப்படையான அம்சங்களைப் பொறுத்ததாகும்.
அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருக்கும் பகுத்தறிவு, இயற்பூக்கம், தூதுத்துவம், இப்பிரபஞ்சத்திலும் அவர்களுக்குள்ளேயும் காணப்படுகின்ற அத்தாட்சிககள் ஆகியவற்றின் மூலம் நிறுவப்பட்ட சான்றாதாரங்களுக்குப் பின்; அவர்களின் மீது தண்டனை விதித்திருப்பதில் எவ்வித அநியாயமும் கிடையாது என்பதை அறிவுள்ளோர் உணர்வர். அல்லாஹ்வை அறிந்து அவனை ஒருவனாக ஏற்று இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளை கடைப்பிடித்து ஓழுகுவதே இவையனைத்திற்கு ஈடாக அவர்கள் செய்ய வேண்டிய குறைந்த பட்ச விடயமாகும். அப்படிச் செய்தால், அவர்கள் நித்திய நரக வாழ்விலிருந்து காப்பாற்றப்பட்டு, இம்மையிலும் மறுமையிலும் மகிழ்சியை- சுகத்தை- அனுபவிப்பார்கள். இது கடினமான ஓரு விடயம் என்று நீர் நினைக்கிறீரா?
அல்லாஹ் படைத்த அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை அவனை மட்டுமே வணங்குவதாகும். அல்லாஹ் தனது அடியார்களுக்கு செய்ய வேண்டிய கடமை, தனக்கு எதனையும் இணைவைக்காதவர்களை தண்டிக்காமல் இருப்பதாகும். ஆக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொள்வது ஒரு இலகுவான விடயம், அது எப்படி? ஒரு நபர் கூறும் சில வார்த்தைகள் அதனை உரிய முறையில் விசுவாசித்து அதன் படி செயலாற்றுவதாகும். இதனை செய்வதே நரகத்திலிருந்து பாதுகாப்புப்பெற போதுமான விடயமாகும். இது ஒரு நீதியான விடயம் என்பதை புரிந்து கொண்டீர்களா? சர்வவல்லமையுள்ள, நீதியுள்ள, மென்மை நிறைந்த, எல்லாம் அறிந்த அல்லாஹ்வின் தீர்ப்பு இதுவாகும். ஆகவே இஸ்லாமிய மார்க்கமென்பது தூய்மை மிக்கவனும் உன்னதமானவனுமான அல்லாஹ்வின் மார்க்கமாகும். அதனை ஏற்று சுபீட்சமாய் ஈருலகிலும் வாழ முயற்சிப்போமாக!.
உண்மையான பிரச்சினை ஒரு நபர் தவறு செய்தாலோ அல்லது பாவம் செய்தாலோ கிடையாது. ஏனென்றால் தவறு செய்வது மனிதர்களின் இயல்பு. ஒவ்வொரு மனிதனும் தவறு செய்வோராவர். தவறு செய்பவர்களில் சிறந்தோர் மனந்திருந்தி வாழ்வோர் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், பாவங்களைச் செய்வதில் எல்லை கடந்து சென்று அதில் விடாப்பிடியாக இருப்பதில்தான் பிரச்சினை இருக்கிறது. தவறு அல்லது குறை என்னவென்றால் அறிவுரை கூறப்பட்டும் அதற்கு செவிசாய்க்காது, அதன் படி செயலாற்றாது இருப்பதாகும். நினைவூட்டப்பட்டு அந்த நினைவூட்டலால் பயனடையாது இருப்பதுமாகும். அல்லது அறிவுரை கூறப்பட்டு அதனை எடுத்து நடக்காது, படிப்பினை பெறாது இருப்பதும், மனந்திருந்தி வாழாது, இறை மன்னிப்புக்கோராது பிடிவாதத்துடன் கர்வம் கொண்டு நிராகரித்து விடுவதுமே மிகவும் இழிவான விடயமாகும்.
''நமது வசனங்கள் அவனுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவனது இரு காதுகளிலும் செவிட்டுத்தன்மை இருப்பது போன்று, அதை அவன் கேட்காதவனாகப் பெருமையடித்து, புறக்கணித்துச் செல்கின்றான். நோவினை தரும் வேதனையைக் கொண்டு நபியே நீர் அவனுக்கு நன்மாரயம் கூறுவாராக''. (லுக்மான் : 7). تقدم