மனிதனைப் பொறுத்தவரை அறிவைத் தேடுவதும், இப்பிரஞ்ச அத்தாட்சிகள் குறித்து ஆய்வு செய்வதும் அவனின் உரிமையாகும். இதற்காகவே அல்லாஹ் எமக்கு பகுத்தறிவைத்தந்து அதனை உரிய முறையில் பயன்படுத்துமாறு குறிப்பிடுகிறான். ஒவ்வொரு மனிதனும் தனது மூதாதையர்களின் மார்க்கத்தை குறித்து ஆய்வோ சிந்தனை செய்யாது மொத்தத்தில் பகுத்தறிவை உரிய முறையில் பயன்படுத்தாமலே கண்மூடித்தனமாக பின்பற்றுகிறான். இதனால் அல்லாஹ் அவனுள் வைத்திருக்கும் மாபெரும் அருளான பகுத்தறிவை அற்பமாகக்கருதி தனது ஆன்மாவுக்கு அநியாயம் இழைத்து தன்னையே சிறுமைப்படுத்திக் கொண்டவனாக மாறிவிடுகிறான்.
ஏகத்துவத்தை ஏற்ற குடும்பத்தில் வளர்ந்த எத்தனையோ முஸ்லிம்கள் சரியான பாதையை விட்டு விலகி அல்லாஹ்வுக்கு இணைவைப்போராக மாறியிருக்கிறார்கள். ஆனால் பல தெய்வக் கோட்பாட்டில் உள்ள ஒரு குடும்பத்தில் அல்லது திரித்துவத்தை நம்பிக்கைகொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பலர் இந்தக் கோட்பாடுகளை உதரித் தள்ளிவிட்டு ' லாஇலாஹ இல்லல்லாஹ் ' (உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாறுமில்லை) எனும் திருக்கலிமாவை மொழிந்து இஸ்லாமிய கொள்கையை ஏற்றோர் பலர் உள்ளனர்.
பின்வரும் உருவகக் கதை இந்தக் கருத்தை விளக்குகிறது: ஒரு மனைவி தன் கணவனுக்காக ஒரு மீனை சமைத்தாள், ஆனால் அவள் அதை சமைப்பதற்கு முன்பு தலையையும் வாலையும் வெட்டினாள். தலையையும் வாலையும் ஏன் வெட்டினாய் என்று கணவன் கேட்டதற்கு. அவள், 'அப்படித்தான் என் அம்மா சமைப்பார்கள்.' அப்போது கணவர் தாயிடம், மீன் சமைக்கும் போது ஏன் வாலையும் தலையையும் வெட்டுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அம்மா, எனது அம்மா அப்படித்தான் சமைப்பார் என்றார். அப்போது கணவன் பாட்டியிடம் ஏன் தலையையும் வாலையும் வெட்டுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவள், 'எங்கள் வீட்டில் சமையல் பாத்திரம் சிறியதாக இருந்தது, பானையின் உள்ளே மீனைப் வைப்பதற்காகவே நான் தலையையும் வாலையும் வெட்ட வேண்டியிருந்தது.' என்று பதிலளித்தாள்.
உண்மையில் எமக்கு முந்தைய காலங்களில் நிகழ்ந்த பல நிகழ்வுகள் அக்காலத்திற்குரியவையாகவும் அக்கால காரணகாரியங்களுடன் பிணைக்கப்பட்டதாகவும் காணப்பட்டது என்பதே யதார்த்தமாகும். இதனை ஒரு வகையில் மேலே குறிப்பிட்ட கற்பனை கதை பிரதிபலிக்கலாம். இறந்த காலத்தில் வாழ்வதும், சூழல் வேறுபாடு மற்றும், கால மாற்றம் போன்றவை பற்றி சிந்திக்காமலும், கேள்வி கேட்காமலும் மற்றவர்களின் செயல்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதும் மிகப் பெரும் மனித அவலம் என்பதே உண்மை.
''எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை''. (அர்ரஃத்:11). تقدم