மனிதர்கள் இவ்வுலக வாழ்வின் இருப்பை அவர்கள் இல்லாத நிலையில் (இங்கு வர முன்னரே) தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை படைப்பாளன் ஏன் கொடுக்கவில்லை?

மனிதர்கள் இவ்வுலக வாழ்வின் இருப்பை அவர்கள் இல்லாத நிலையில் (இங்கு வர முன்னரே) தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை படைப்பாளன் கொடுக்க விரும்பியிருந்தால் அவர்களின் இருப்புக்கான ஆரம்பம் ஒன்று இருந்திருக்க வேண்டும். மனிதன் இல்லாமையில் இருக்கும் நிலையில் அவனுக்கென்று எப்படி சுய அபிப்பிரயாம் ஒன்று இருந்திருக்க முடியும்;? இங்குள்ள பிரச்சினை இருப்புக்கும் இல்லாமைக்கும் இடையிலான பிரச்சினையாகும். ஒருவருக்கு வாழ்க்கையின் மீதுள்ள பற்றுதலும், அதன் மீதான பயமும் இந்த அருளை அவர் திருப்தியோடு ஏற்றிருப்பதற்கான மிகப்பெரிய சான்றாகும்.

நிச்சயமாக வாழ்வெனும் அருளானது அல்லாஹ்வை வெறுத்து புறக்கணித்து வாழும் மோசமான மனிதனிலிருந்து அல்லாஹ்வை நேசித்து வாழும் சிறந்த மனிதனை வேறுபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு பரீட்சையாகும். ஆகவே, இறைபடைப்பின் நோக்கம் யாதெனில் அவனை ஏற்றுக் கொண்டோருக்கு மறுமையில் சுவர்க்கத்தை வழங்குவதே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட இந்த கேள்வியானது, சந்தேகம் மனதில் ஆழமாக பதிந்து விட்டால் தர்க்கரீதியாக சிந்திப்பதை தடுத்து விடும் என்பதை அறிவிக்கிறது. இது அல்குர்ஆனின் அற்புத சான்றுகளில் ஒன்றுமாகும்.

இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் :

"நியாயமின்றிப் பூமியில் பெருமையடிப்போரை எனது அத்தாட்சிகளை விட்டும் நான் திருப்பி விடுவேன். அவர்கள் அத்தாட்சிகள் அனைத்தையும் பார்த்தாலும் அவற்றை நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். அவர்கள் நேர்வழியைக் கண்டாலும்- அறிந்தாலும்- அதை (தமது) வழியாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் வழிகேட்டின் பாதையைக் கண்டால் அதனைத் தம் வழியாக எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் எமது அத்தாட்டசியை பொய்பித்ததும், அவற்றை அவர்கள் அலட்சியம் செய்பவர்களாக இருந்ததுமே இதற்குக் காரணமாகும்". (அல் அஃராப் :146). تقدم

படைப்பின் இறை நுட்பத்தை அறிவது நாம் கோரும் உரிமைகளில் ஒன்றாக கருதுவதோ, அதை நாம் அறியாத விதத்தில் மறைத்து வைத்திருப்பது எமக்கு செய்யும் அநீதி எனக் கருதுவதோ சரியான நிலைப்பாடு அல்ல என்பதையும் விளங்கவேண்டும்.

எந்தக் காதும் கேட்காத, எந்தக் கண்ணும் பார்க்காத, மனித இதயத்தில் தோன்றாத- உதிக்காத- எல்லையற்ற பேரின்பம் நிறைந்த சொர்க்கத்தில இருப்பதற்கு, நித்திய வாழ்வின் வாய்ப்பை அல்லாஹ் நமக்கு அருளாக தந்திருக்கும் போது, இதில் என்ன அநியாயம் இருக்கிறது?

பேரின்பம் நிறைந்த சுவர்க்கத்தை தேர்ந்தெடுப்பதற்கும் அல்லது நரக வேதனையை தேர்ந்தெடுப்பதற்குமான, தீர்மானிக்கும் சுதந்திரத்தை அவன் எமக்களித்துள்ளான்!

இந்த பேரின்பத்தை அடைவதற்கும், வேதனையிலிருந்து தப்பிப்பதற்குமான வழிகளை, மிகத் தெளிவாக விளக்கும் பாதை வரைபடம் ஒன்றை எமக்களித்துள்ளதுடன் எம்மிடமிருந்து அவன் எதை எதிர்பார்க்கிறான் என்பதையும் எமக்கறிவித்துள்ளான்.

அல்லாஹ் சொர்கத்திற்கான பாதையில் செல்ல பல்வேறு வழிமுறைகளினூடாக ஊக்குவித்து, நரகத்தின் பாதையில் செல்வதை விட்டும் எம்மை மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறான்.

நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சொர்க்கவாசிகளின் சம்பவங்களையும், அவர்கள் எப்படி வெற்றிபெற்றார்கள் என்பதையும், நரகவாசிகளின் சம்பவங்களையும், அந்த வேதனைக்கு எவ்வாறு உட்பட்டடார்கள் என்பதையும் எமக்கு அல்லாஹ் கூறுகிறான்.

நாம் நன்கு விளங்கி படிப்பினை பெறவேண்டும் என்பதற்காக சுவனவாசிகள் மற்றும் நரகவாசிகளுக்கிடையில் நடக்கும் உரையாடல்கள் பற்றியும் எமக்கு அறியத்தருகிறான்.

ஒரு நன்மையான காரியத்திற்கு பத்து நன்மைகளையும், ஒரு தீய செயலுக்கு ஒரு தீமையையும் அளிப்பதன் மூலம் நாம் நன்மையான காரியங்களில் விரைந்து செயற்பட வேண்டும் என்பதை அறிவித்துத் தருகிறான்.

மேலும் அல்லாஹ் நாம் ஒரு தீமையான காரியத்தை தொடர்ந்து நன்மையான ஒரு காரியத்தை செய்தால் அந்த நன்மையான காரியம் அத்தீமையை அழித்துவிடுகிறது எனவும் எமக்கு அறியத்தந்துள்ளான். ஆகவே நாம் ஒரு நன்மைக்கு பத்து நன்மைகளைப் பெற்றுக்கொள்வதோடு எமது தீமையும் அழிந்து விடுகிறது.

தவ்பா (பாவமீட்சியானது) அதற்கு முன் செய்த தவறுகளை அழித்து விடுகிறது எனவும், பாவத்திலிருந்து பாவமீட்சி கோரியவன் எவ்விதப்பாவமும் அற்றவன் போலாவான் எனவும் எமக்கு அறியத்தந்துள்ளான்.

அது மாத்திரமின்றி நன்மையான காரியத்திற்கு வழிகாட்டுபவன் அக்காரியத்தை செய்பவனைப் போலாவான் என்ற நிலைக்கு அல்லாஹ் ஆக்கிவிடுகிறான்.

அல்லாஹ், நன்மைகளை பெற்றுக்கொள்வதை மிக இலகுவானதாக ஆக்கிவைத்துள்ளான். எனவே பாவமன்னிப்பு, தஸ்பீஹ், அஸ்கார்- இறை சிந்தனை- போன்றவையின் மூலம் மிகப்பெரும் நன்மைகளை அடைந்து கொள்ளவும் எவ்வித சிரமுமின்றி எமது பாவங்களிலிருந்து விடுதலை பெறவும் முடிகிறது.

அல்குர்ஆனின் ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள் என எங்களுக்கு ஏற்படுத்திவைத்துள்ளான்

நல்லகாரியத்தை செய்வதற்கு நினைப்பதற்கும் அதனை எம்மால் செய்ய முடியவில்லையாயினும் அதற்கும் எங்களுக்கு கூலி வழங்குகிறான். ஒரு தீமையை செய்ய நினைத்து அதனை செய்ய வில்லையென்றால் அத்தீமையை நினைத்ததற்காக எம்மை விசாரிக்க மாட்டான்.

நல்ல காரியத்தை செய்வதற்கு நாம் விரைந்து சென்றால் அவன் அதற்காக எமது நேர்வழியை அதிகரிக்கச் செய்வான், எமக்கு நல் வாய்ப்பைத் தருவான். (வெற்றியைத் தருவான்) நன்மையான வழிகளை இலகு படுத்தித் தருவதாகவும் எமக்கு அவன் வாக்களிக்கிறான்.

இத்துனை நன்மைகளையும் எமக்காக ஏற்படுத்தித் தந்திருக்கும் அல்லாஹ்வின் விடயத்தில் எதை அநீதி என கூறுவது?

உண்மையில் அல்லாஹ் எம்முடன் அவனின் நீதியினால் மாத்திரம் உறவாடவில்லை, மாறாக அவனின் கருணையினாலும் அவனின் தாராளத் தன்மையினாலும் அவனின் பேருபகாரத்தினாலும் எம்முடன் உறவாடுகிறான்.

PDF