வாழ்க்கையில் தீமை இருப்பது கடவுள் இல்லை என்பதைக் காட்டுகிறதா?

இவ்வுலக வாழ்க்கையில் தீமைகள் இருப்பதற்கான காரணம் குறித்து கேள்வி கேட்பவர் கடவுளின் இருப்பை மறுப்பதற்கு நியாயம் தேடுவதையே நோக்காகக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவருடைய குறுகிய பார்வையையும் அதன் பின்னால் உள்ள ஞானத்தைப் பற்றிய அவரது சிந்தனையின் பலவீனத்தையும், உள்ளார்ந்த விஷயங்களைப் பற்றிய அறிவின்மையையும் நமக்கு வெளிப்படுத்துகிறார். மேலும் நாத்திகர் தனது கேள்வியின் மூலம் தீமை விதிவிலக்கு என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

எனவே, தீமை தோன்றியதன் நுட்பம் பற்றி கேள்வி கேட்க முன், 'முதன்முதலில் நல்லது எப்படி வந்தது?' என்ற மிகவும் யதார்த்தமான கேள்வியைக் கேட்க வேண்டும்.

இதைவிடவும் மிக முக்கிய கேள்வியான ' நல்லதை படைத்தவன் யார்? என்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான கேள்வி என்பதில் சந்தேகமும் இல்லை. அத்துடன் தொடக்கப் புள்ளி அல்லது அடிப்படை அல்லது நடைமுறையில் பரவலாக உள்ள கொள்கையில் நாம் உடன்பட வேண்டும். இவ்வுடன்பாடுகளின் பின் விதிவிலக்குகளுக்கான காரணங்களை நாம் தேட முடியும்.

விஞ்ஞானிகள் முதலில் பௌதிகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியலுக்கான நிலையான மற்றும் குறிப்பிட்ட சில விதிகளை உருவாக்குகிறார்கள். பின்னர் அவர்கள் அந்த விதிகளில் விதிவிலக்கான மற்றும் அசாதாரண நிலைகளைக் குறித்து ஆய்வு செய்கின்றனர். இதேபோல், நாத்திகர்கள் அழகும், மிகச்சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டதும் எண்ணற்ற பல காட்சிகளும் தோற்றப்பாடுகளும் நிறைந்த இவ்வுலகத்தின் இருப்பை முதலில் ஒப்புக் கொள்ளாத வரை, தீமை இருப்பதான அனுமானத்தை-கற்பிதத்தை- வெல்ல முடியாது.

சராசரி ஆயுட்காலம் முழுவதிலும் ஆரோக்கியமாக இருந்த காலப்பகுதியை நோய் ஏற்பட்ட காலங்களுடன் ஒப்பிடுவதன் மூலம், அல்லது பல தசாப்தங்களாக காணப்பட்ட செழிப்பு, முன்னேற்றத்தை, அழிவும் சேதமும், நாசமும் நிறைந்த காலங்களுடன் ஒப்பிடுவதன் மூலம், அதே போல் இயற்கையானது எவ்வித அனர்த்தங்களுமின்றி பல நூற்றாண்டுகளாக அமைதியும் இஸ்திரமாகவும் இருந்த காலப்பகுதியை நில நடுக்கம், எரிமலை வெடித்தல் போன்ற அனர்த்த காலப்பகுதிகளுடன் நாம் ஒப்பிட்டுப் பார்ப்போமேயானால் ஆரம்பத்தில் நிலவிய நன்மை அல்லது மேம்பாடு என்பது எங்கிருந்து வந்தது? தற்செயல் நிகழ்வுகளையும் குழப்பங்களையும் அடிப்படையாகக் கொண்ட உலகம் ஒரு நல்ல உலகத்தை உருவாக்கிட முடியாது.

அறிவியல் சோதனைகள் இதை உறுதிப்படுத்துவது நகைப்புக்குரியது. வெப்ப இயக்கவியலின் இரண்டாவது விதி, எந்தவொரு வெளிப்புற தாக்கமும் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பில் மொத்த என்ட்ரோபி (கோளாறு அல்லது சீரற்ற தன்மை) எப்போதும் அதிகரிக்கும், மேலும் இந்த செயல்முறை மீள முடியாதது என்று கூறுகிறது.

வேறு வார்த்தையில் கூறுவதானால், ஒழுங்கமைக்கப்பட்ட பொருட்களுக்கு பக்கபலமாக அவற்றை தாங்கிக் கொள்ளக் கூடிய ஒரு பொருள் வெளியில் இல்லாதிருந்தால் அவை எப்பொழுதும் சரிந்து சிதறுண்டுவிடும். இந்த வகையில், அழகு, ஞானம், மகிழ்ச்சி மற்றும் அன்பு போன்ற அற்புதமான விஷயங்களில் தோன்றும் இந்த சீரற்ற நிகழ்வுகளை படைப்பாளன் ஒழுங்கமைக்காமல், வெப்ப இயக்கவியலானது தன்னிச்சையாக எதையும் உருவாக்கிடவோ அல்லது இறைவனின் படைப்பில் அது போன்ற ஒன்றை மிகச்சிறப்பான முறையில் செய்திடவோ முடியாது. இதற்கு முன்னர் நலவுதான் அடிப்படையென்றும் தீமை விதிவிலக்கானதென்றும் அங்கே வல்லமை மிக்க ஓர் இறைவன் உள்ளான், அவன் படைத்துத் திட்டமிட்டு நிர்வகிப்பவனாக உள்ளான் என்றும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

PDF