இயற்கை அனர்த்தங்கள் நிகழ்வதில் இறைவனின் நோக்கம்; யாது?

இறைவன் பௌதீக விதிகளையும் அவற்றை நிர்வகிக்கும் கோட்பாடுகளையும் வைத்துள்ளான். இப்பிரபஞ்சத்தில் முறைகேடு அல்லது சுற்றுச்சூழல் கோளாறு ஏற்பட்டால் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்கின்றது. அத்துடன் பூமியில் சீர்திருத்தமும் மிகச் சிறந்த வாழ்வும் தொடர வேண்டும் என்ற நோக்கில் இந்த சமநிலையின் இருப்பை அது பேணிப்பாதுகாக்கிறது. மக்களுக்கும் வாழ்க்கைக்கும் நன்மையளிப்பவை –பயனளிப்பவை மாத்திரமே எஞ்சியிருக்கும். ஏனையவை அழிந்துவிடும். பூமியில் பேரழிவுகள் ஏற்படும் போது நோய்கள், எரிமலைகள், பூகம்பம், வெள்ளம் போன்றவைகளால் , மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில், இறைவனின் திருப் பெயர்களான வலிமைமிக்கவன், குணப்படுத்துபவன் பாதுகாப்பாளன் போன்ற பெயர்கள் பிரதிபலிக்கின்றன. அதாவது நோயாளியை குணப்படுத்துவதிலும், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பதிலும் அவனின் உயரிய திருநாமங்கள் வெளிப்படுகின்றன. அதேபோல், நீதியாளன் எனும் அவனின் திருநாமமானது பிறருக்கு அநியாயம் செய்தவன், மற்றும் பாவியை தண்டிப்பதிலும் வெளிப்படுகிறது. அதே நேரத்தில் அவன் ஞானமிக்கவன் எனும் திருநாமமானது பாவியல்லாதோரை சோதிப்பதில் பிரதிபலிக்கிறது. அதாவது ஒருவன் இறைவனின் சோதனையில் பொறுமை காத்தால் அவனுக்கு வெகுமதி வழங்கியும், யார் அவனின் சோதனையில் வெறுப்போடு நடந்து கொள்கிறானோ அவனுக்கு தண்டனை வழங்குவதன் மூலமும் கூலி வழங்குவதாகும். ஒரு மனிதன் தனது இரட்சகனின் அழகிய கொடைகளை –வெகுமதிகளை அறிந்து கொள்வது போல், இந்த சோதனைகள் மூலம் அவனது மகத்துவத்தையும் தெரிந்து கொள்கிறான். இறைவனின் அழகிய இறை பண்புகளை அறிந்து கொள்வதால் மாத்திரம் அவனை அறியமுடியாது மாறாக ஏனைய எல்லாப் பண்புகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.

சமகால சடவாத தத்துவஞானிகளில் பலர் நாத்திகத்தை ஏற்றுக் கொள்வதில் இவ்வுலகில் நிகழும் இன்னல்கள், தீமைகள் மற்றும் வலிகள் பின்னணியாக அமைந்தது. அவர்களுள் தத்துவஞானி 'அந்தோனி ஃப்ளு'வும் ஒருவர், அவர் இறப்பதற்கு முன் கடவுள் இருப்பதை ஒப்புக்கொண்டு 'கடவுள் இருக்கிறார்' என்ற புத்தகத்தை எழுதினார். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் நாத்திகத்தில் ஒரு முக்கிய தலைவராக இருந்த போதிலும், கடவுள் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டபோது, அவர் பின்வருமாறு கூறினார்:

'மனித வாழ்க்கையில் தீமை மற்றும் துன்பம் இருப்பது கடவுளின் இருப்பை நிராகரிக்காது. ஆனால் தெய்வீக பண்புகளை மறுபரிசீலனை செய்ய நம்மை தூண்டுகிறது'. 'இந்த பேரழிவுகள் ஒரு நபரின் பௌதீகரீதியான திறன்களைத் தூண்டுவதால், பல நேர்மறையான அம்சங்களைக் கொண்டிருப்பதாக 'அந்தோனி ஃப்ளு', கருதுகிறார். அதாவது இந்தப் பேரழிவிலிருந்து காக்கவல்ல பல விடயங்களை புதிதாக கண்டுபிடிப்பதற்கான உத்வேகத்தை மனிதனுக்கு வழங்குவதுடன், சிறந்த உளவியல் பண்புகளைத் தூண்டி, மக்களுக்கு உதவ அவனை நிர்ப்பந்திக்கிறது. அத்துடன் வரலாறு முழுவதும் மனித நாகரிகங்களைக் கட்டியெழுப்பிய பெருமை தீங்கு மற்றும் இன்னலுக்கு உண்டு என்றும் அவர் கூறுகிறார். இந்த சிக்கலை தெளிவுபடுத்தவும் விளக்குவதற்கும் பல ஆய்வுக் கட்டுரைகள் தேவைப்படும். எனவே இதற்குரிய தெளிவை தரக்கூடியதாக மத விளக்கம் இருப்பதோடு அது மிகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், வாழ்க்கையின் இயல்புக்கு மிகவும் இணக்கமாகவும் இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார்'. (கலாநிதி அம்ரு ஷரீபின் குராபதுல் இல்ஹாத் -பதிப்பு -2014 (நாஸ்தீக மூடநம்பிக்கை) என்ற நூலிலிருந்து பெறப்பட்டது). تقدم

உண்மையில், சில சமயங்களில் நம் சிறு குழந்தைகளை அறுவை சிகிச்சை அறைக்கு வயிற்றைக் கிழிப்பதற்காக அன்புடன் அழைத்துச் செல்வதைக் காண்கிறோம். இந்தத் தருனங்களில் வைத்தியரின் அறிவு, சிறியவர் மீதான அவரது அன்பு மற்றும் அந்தக் குழந்தையின் உயிரைக்காப்பதற்கான அவரின் ஆர்வம் போன்றவற்றில் நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றால் படைப்பாளனான இறைவனின் வல்லமையிலும் அவனின் ஞானத்திலும் கருணையிலும் நம்பிக்கையற்று இருக்கிறோமல்லவா?! (தழுவல்: நூல் :நாத்திக புராணம் டாக்டர். அம்ரு ஷரீப். பதிப்பு 2014 ).

PDF