தீமை அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருகிறதா?

தீமையானது இறைவன் புறத்திலிருந்து வருவதில்லை. தீமைகள் அடிப்படையில இருப்பியல் சார்ந்த விடயமல்ல. ஆக, இருப்பானது நன்மையின் மொத்த வடிவமாகும்.

உதாரணத்திற்கு ஒருவர் இன்னொருவரை, எழுந்து நடமாட முடியாத அளவு மிகக்கடுமையாக தாக்கிவிட்டார் என்றால் அவர் அநியாயம் என்ற பண்பை பெற்றவராக மாறிவிடுகிறார். அநியாயம் என்பது தீமையுமாகும்.

இருப்பினும், ஒரு தடியை எடுத்து மற்றொரு நபரைத் தாக்கும் ஒருவரிடம் அதிகார ஆற்றல் இருப்பது இயல்பிலேயே தீமை அல்ல.

இறைவன் அவனுக்கு வழங்கிய நாட்டம் அவனுள் இருப்பது தீமையல்ல.

அவனது கையை அசைக்கும் ஆற்றல் அவனிடம் காணப்படுவதும் தீமையல்ல.

தடியில் அடிக்கும் பண்பு இருப்பதும் தீமையல்ல.

இந்த இருத்தலியல் விடயங்கள் அனைத்தும், உண்மையில் நல்லவையாகும். நாம் ஏலவே குறிப்பிட்ட உதாரணத்தில் உள்ளது போல், தவறான பயன்பாட்டின் மூலம் எப்போது தீங்கு விளைவிப்பதாக அமையுமோ அப்போது மட்டுமே அவை அதற்குரிய தீய பண்புகளைப் பெறுகின்றன. இந்த எடுத்துக்காட்டின் அடிப்படையில், தேள் மற்றும் பாம்புகளின் இருப்பில் உண்மையில் எந்தத் தீங்கும் கிடையாது. அவைகளை எவராவது எதிர்கொள்வதினூடாக அவரை அவை தீண்டுவதன் மூலமே தீங்கு ஏற்படுகிறது. எனவே, இறைவனின் செயல்களில் தீமை கிடையாது. அவை முற்றிலும் நன்மையானவையாகும். மாறாக, தனது இறைவிதியின் மூலம் இடம்பெரும் நிகழ்வுகளில், அவற்றை தடுப்பதற்கான வல்லமையை பெற்றிருப்பினும் அதில் இறை நுட்பமும், மனிதர்களுக்கான அதிக நலன்களும் உள்ளடங்கியுள்ளன. ஆனால் மனிதன் இந்த நன்மைகளை பிழையான முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.

PDF