கடும் நெரிசல் காரணமாக சில முஸ்லிம்கள் மரணிப்பதற்கு வாய்ப்புல்லதால் ஹஜ் ஒரு பயங்கரமான வணக்கம் -கிரியை- என்று கருதப்படாதா?

ஹஜ்ஜில் நெரிசல் காரணமாக குறிப்பிட்ட சிலவருடங்களில் மாத்திரமே மரணசம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் வழமையில் நெரிசல் காரணமாக மரணமடைவோரின் தொகை மிகவும் குறைவானதாகும். ஆனால் உதாரணத்திற்கு குறிப்பிடுவோமாயின் நாம் மது அருந்துவதன் விளைவாக இறக்கும் நபர்களை கணக்கிட்டால் அவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பல மில்லியன்கலாகும். அதுமாத்திரமின்றி தென் அமெரிக்காவில் கால்பந்து அரங்கங்கள் மற்றும்; திருவிழாக்களில் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை இதை விட அதிகமாகும்! என்பதை கருத்திற்கொள்ள வேண்டும். எப்படியிருந்தாலும், மரணம் தவிர்க்க முடியாத மாபெரும் உண்மையாகும், இறைவனை சந்திப்பது அது போன்ற உண்மையாகும். ஆகவே பாவத்தில் இறப்பதை விட நற்காரியத்தில் இறப்பது மிகவும் சிறந்தல்லவா!

மால்கம் எக்ஸ் கூறுகிறார்:

'இந்த பூமியில் எனது இருபத்தி ஒன்பது வருட வாழ்க்கையில் முதன்முறையாக, நான் எல்லாவற்றையும் படைத்தவன் முன் நின்று, ஒரு முழுமையான மனிதனாக இருப்பதை உணர்ந்தேன். அதே போன்று எல்லா நிறத்தவரும், இனங்களும் சங்கமமாகி ஓரிடத்தில் அணிதிரண்டு உண்மையான சகோதரத்துவத்தை பிரதிபலிக்கும் ஒரு சமூகத்தை நான் கண்டதில்லை. அமெரிக்கா இஸ்லாத்தை புரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் இனவெறிப் பிரச்சினைக்கான யதார்த்தமான தீர்வை தன்னகத்தே கொண்ட ஒரே மதமாக இஸ்லாம் மாத்திரமே திகழ்கிறது' (இவர் ஆபிரிக்க இனத்தை சேர்ந்த அமெரிக்க இஸ்லாமிய போதகர். மற்றும் மனித உரிமைகள் போராளி, அமெரிக்காவில் இஸ்லாமிய இயக்கத்தின் போக்கை சரிசெய்து, சரியான இஸ்லாமிய கொள்கையின் பால் அழைப்பு விடுத்தவர்). تقدم

PDF