சிலைவழிபாட்டு மதங்களுக்கும் குறிப்பிட்ட சில இடங்கள், மற்றும் சடங்குகளை சிறப்பிப்பதற்குமிடையே பாரிய வேறுபாடுகள் உண்டு. அவை மத அல்லது தேசிய அல்லது கலாச்சாரமாக இருந்தாலும் சரியே!
உதாரணமாக, ஹஜ்ஜின் போது ஜமராத்துக்ளில் கல்லெறிவது, ஷைத்தனுக்கு முரண்படுவதையும் அவனைப் பின்பற்ற மறுப்பதையும் காட்டுகிறது. மற்றும் நமது நபி இப்ராஹிம் (ஆபிரகாம்) அவர்களின் செயலைப் பின்பற்றுவதாகக் கருதப்படுகிறது. தனது இரட்சகனின் கட்டளைப்படி மகனை பலியிடுவதை ஷைத்தான் தோன்றி தடுக்க முயற்சித்தான். அப்போது இப்ராஹிம் நபி ஷைத்தானுக்கு கூழாங்கற்களால் கல்லெறிந்தார். இதனையே முஸ்லிம்கள் ஒரு கிரியையாக நிறைவேற்றுகின்றனர். (இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மூலம் அறிவிக்கப்பட்ட ஹதீஸ் முஸ்தத்ரக் ஹாகிமிலும் இப்னு குஸைமாவின் ஸஹீஹிலும் பதிசெய்யப்பட்டுள்ளது). இதேபோன்று, ஸஃபா மற்றும் மர்வாவிற்கு இடையே ஓட்டமும் நடையுமாக செல்லும் வணக்கமுமாகும். தனது மகன் இஸ்மாயிலுக்காக அன்னை ஹாஜர் தண்ணீரைத் தேடி இரு மலைக்கிடையில் அவர்கள் ஓடியமையை நினைவு கூறும் ஒரு செயல். இதனை ஹஜ் மற்றும் உம்ராவின் போது நிறைவேற்றும் ஒரு கடமையாக இஸ்லாம் விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், ஹஜ்ஜின் அனைத்து கிரியைகளும் அல்லாஹ்வை நினைவு கூறுவதையும், அகிலங்களின் இரட்சகனுக்கு அடி பணிந்து வழிபடுதலையும் குறித்துக்காட்டுவதுடன் அதனையே இலக்காகவும் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக அவர்கள் கற்களையோ, இடங்களையோ அல்லது தனி நபர்களையோ வணங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அதே வேளை வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கிடையே உள்ள அனைத்தினதும் இரட்சகனும், எல்லாவற்றையும் படைத்தவனும், அவற்றின் இறையாண்மையும் கொண்ட ஒரே கடவுளை வணங்குவதற்கு இஸ்லாம் அழைப்பு விடுக்கிறது. تقدم