தொழுகையின் திசை அல்-அக்ஸா பள்ளிவாயிலிருந்து மக்காவில் உள்ள புனித ஹரம் பள்ளிக்கு மாற்றப்பட்டது ஏன்?

கஃபா ஆலயம் தொடர்பான குறிப்புகள் வரலாறு முழுதும் அதிகமாக இடம்பெற்றுள்ளன. அரேபிய தீபகற்பத்திற்கு அப்பால் தொலைத்தூரத்திலிருந்து இதனை தரிசிப்பதற்காக மக்கள் வருடம் தோரும் வருகை தந்திருந்தனர். அத்துடன் முழு அரேபியத் தீபகற்பத்தில் உள்ளோரும் இதனைப் புனிதப்படுத்துகின்றனர். கஃபா குறித்து பழைய ஏற்பாட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது: 'பாக்கா பள்ளத்தாக்கைக் கடந்து, அவர்கள் அதை நீரூற்றுகளின் இடமாக மாற்றுகிறார்கள்'. (பழைய ஏற்பாடு, சங்கீதம் 84).

அரேபியர்கள் இஸ்லாம் வர முன் கஃபாவை மிகவும் மதித்து புனிதப்படுத்துவோராக இருந்தனர். ஆரம்பத்தில், முஹம்மது நபி தூதுவராக அனுப்பப்பட்டவேளை, அல்லாஹ் ஜெரூசலத்தில் உள்ள பைத்துல் மக்திஸை நபியவர்களின் கிப்லாவாக ஆக்கினான். முஹம்மது நபியைப் பின்பற்றுவோரில் அவர்களை எதிர்போரிலிருந்து, அல்லாஹ்வுக்கு தூய்மையான முறையில் கட்டுப்படுவோரை வேறுபடுத்துவதற்கான சோதனையாக, புனித ஹரமை நோக்கி தொழும் திசையாக ஆக்கிக்கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். இதயங்களைத் தூய்மைப்படுத்துவதும், அல்லாஹ்வில் மாத்திரம் உள்ளத்தைப் பற்றுக்கொள்ளச் செய்வதுமே கிப்லாவை (தொழுகையின் திசையை) மாற்றியதன் பின்னணியில் உள்ள பிரதான நோக்கமாகும். நபியவர்கள் வழிகாட்டலை ஏற்று முஸ்லிம்கள் கட்டுப்பட்டனர். யூதர்களோ தங்களின் கொள்கைக்கு நியாயம் கற்பிக்க நபியவர்கள் பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுததை சார்பாக கொண்டனர். تقدم

கிப்லாவின் மற்றமானது, அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கைகளை இஸ்ரவேலர்கள் மீறியதன் காரணமாக, மதத்தலைமையானது இஸ்ரவேலர்களிடமிருந்து அகற்றப்பட்டடு அரேபியர்களுக்கு மாறுவதற்கான அறிகுறியாகவும் திருப்புமுனையாகவும் காணப்பட்டது.

PDF