இதனை உதாரணம் ஒன்றின் மூலம் விளக்கலாம். அதாவது ஒரு மனிதன் தன்னை ஒரு பெரிய செல்வந்தனாகவும் தயாள குணமுடையவானாகவும் வல்லாலாக காணும் வேளை அவன் தனது நண்பர்களையும் விருப்புக்குரியவர்களையும் உண்ணவும் பருகவும் அழைப்பான்.
எங்களில் காணப்படும் இந்தப் பண்புகள் அல்லாஹ்வுடன் ஒப்பிடுகையில் அவனில் காணப்படுபவற்றில் மிகவும் சாதாரணமாகும். ஆக அல்லாஹ்வுக்கே கண்ணியம் மற்றும் அழகின் பண்புகள் உரியன. அவன் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகவும் தாராளாமாக வழங்குபவனாகவும் உள்ளான். எம்மை அவனுக்கு வனங்கி வழிபடவே படைத்துள்ளான். நாம் எப்போது அவனுக்கு தூய்மையான முறையில் வணக்கத்தை செலுத்தி அவனின் கட்டளைகளை ஏற்று அடிபணிந்து நடந்தால் அவன் நிச்சயமாக எமக்கு அன்பு காட்டுவான் எம்மை மகிழ்வித்து எமக்கான அனைத்தையும் தருவான். இந்த வகையில் மனிதனின் அழகான பண்புகள் யாவும் அவனின் பண்புகளிலிருந்து பிரிந்து வந்ததாகும்.
அல்லாஹ் எம்மைப் படைத்து, தெரிவுரிமை ஆற்றலை வழங்கினான். இதன் மூலம் அவனுக்கு கட்டுப்படுதல், வணங்குதல் போன்ற பாதையை தெரிவு செய்யலாம், அல்லது அல்லாஹ்வின் இருப்பை மறுத்து அத்துமீறுதல் மற்றும் அவனைப் புறக்கணித்து மாறுசெய்தல் எனும் பதையை தெரிவு செய்யலாம். இவ்விரு பாதைகளில் ஒன்றை தெரிவு செய்து வாழும் உரிமை எமக்கே உள்ளது.
"ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்கே தவிர (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. அவர்களிடமிருந்து எந்த வாழ்வாதாரத்தையும் விரும்பவில்லை. இன்னும் அவர்கள் எனக்கு உணவளிக்க வேண்டும் எனவும் நான் விரும்பவில்லை. நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப்பவனும், பலமிக்கவனும் உறுதியானவனுமாவான்". (ஸாரியாத் : 56- 58). تقدم
அல்லாஹ் படைப்புகளில் எவ்விதத் தேவையுமற்றவன் என்ற விவகாரமானது மூலாதார அடிப்படையிலும் (அல்குர்ஆன் மற்றும் நபிவழிறையில்) பகுத்தறிவு அடிப்படையிலும்; உறுதிப்படுத்தப்பட்ட விடயமாகும்.
"நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரை விட்டும் தேவையற்றவன்".(அல் அன்கபூத் : 6). تقدم
பகுத்தறிவுரீதியில், இதனை இவ்வாறு குறிப்பிடலாம். எவ்வித குறைகளுமற்ற பூரண படைப்பாளன் என்பவன் முழுமையான எவ்விதக் குறைகளற்ற பரிபூரண பண்புகளைப் பெற்றிருப்பான் என்பதே உண்மையாகும். அந்த வகையில் பரிபூரண பண்புகளைப் பெற்றவனுக்கு ஏனையவற்றின் தேவை ஒரு போதும் இருக்காது என்பதே யதார்த்தமும் ஆகும். அவ்வாறு ஏனையோரின் பால் தேவை இருப்பது பெரும் குறையாகும். இக்குறை பண்பிலிருந்து மிகவும் தூயவனாக அல்லாஹ் இருக்கிறான்.
தெரிவுச்சுதந்திர விவகாரத்தில் ஏனைய உயிரனங்களிலிருந்து ஜின் மற்றும் மனித இனத்தை தனித்துவப்படுத்தியுள்ளான். மனிதனின் தனித்துவமானது, அகிலங்களின் இரட்சகனை நோக்கிச் சென்று சுயவிருப்பத்தின் அடிப்படையில் அவனுக்குத் தூய்மையாக தலைவணங்குவதாகும். இதன் மூலம் உயிரினங்களின் தலையாய –பிரதான –உயிரனமாக மனிதனை அல்லாஹ் வைத்திருப்பதன் நுணுக்கம் விளங்குகிறது.
அகிலங்களின் இரட்சகனை அறிதல் என்பது அவனின் அழகிய பெயர்கள் மற்றும் உயர் பண்புகள் ஆகியவற்றை அறிவதினூடாக உறுதியாகும். அவைகள் அடிப்படையான இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. அவையாவன:
அழகிய பெயர்கள்: இவை கருணை மன்னிப்பு மென்மை தொடர்பான அனைத்துப் பண்புகளையும் குறிக்கும். அவற்றுள் அர்ரஹ்மான் (அருளாளன்), அர்ரஹீம் ( நிகரற்ற அன்புடையோன்), அர்ராஸிக் (வாழ்வாதாரத்தை வழங்குபவன்), அல் வஹ்ஹாப் (மிகப்பெரும் கொடையாளன்), அல் பர்ரு (பேருபகாரி) அர்ரஊப் (இரக்கமுள்ளவன்) போன்ற சிலவாகும்.
கண்ணியப் பெயர்கள் : சக்தி, பலம், மேன்மை, மதிப்பச்சம் போன்ற கருத்துக்களைக் காட்டும் அனைத்து பண்புகளையும் இது குறிக்கிறது. அவற்றுள் அஸீஸ், (யாவற்றையும் மிகைத்தவன்) அல் ஜப்பார் (சீர் குழைந்ததை சரிசெய்பவன் ) அல் கஹ்ஹார் (யாவற்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்) அல் காபிழ் (கைவசப்படுத்துபவன்) அல் ஃகாபிழ் (தாழ்த்துபவன்).
நாம் அல்லாஹ்வின் அழகிய பண்புகளை அறிந்து கொள்வதன் மூலம் அவனை (அவனுக்குப்) பொருத்தமான விதத்தில் கண்ணிப்படுத்தி, பெருமைப்படுத்துவதோடு, அவனுக்குப் பொருந்தாத பண்புகளை விட்டும் அவனை தூய்மைப்படுத்தி அவனின் கருணையை ஆசித்தும், அவனின் கோபம் மற்றும் தண்டணையை பயந்தும் அவனை அழகிய முறையில் வணங்கி வழிபட முடியும். அல்லாஹ்வை வணங்கி வழபடுதல், அவனின் கட்டளைகளை ஏற்றுப் பின்பற்றி, தடுத்தவற்றை தவிர்ந்து நடப்பதிலும், சீர்திருத்தப்பணி மற்றும் பூமியை வலப்படுத்தும் பணியிலும் தங்கியுள்ளது. இதன் படி உலக வாழ்வென்பது மனிதனுக்கான ஒரு சோதனை மற்றும் பரீட்சை களம் என்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையிலேயே மனிதர்கள் அல்லாஹ்விடத்தில் வேறுபடுத்தப்படுவர். அதாவது அல்லாஹ் தனக்கு பயந்து கட்டுப்பட்டு வாழ்ந்தோரின் அந்தஸ்தை உயர்த்தி இந்தப் பூமியை ஆழவும் மறுமையில் அநந்தரமாக சொர்கத்தை பெறுவதற்கும் தகுதியுடையோராக மாற்றிவிடுவான். அதே வேளை அவனுக்கு கட்டுப்படாது குழப்பம் விளைவித்து நடப்போருக்கு இவ்வுலகிலகில் இழிவையும், மறுமையில் அவர்களுக்கான மீளுமிடத்தை நரகமாகவும் மாற்றிடுவான்.
"அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என அவர்களைச் சோதிப்பதற்காக பூமியின் மீது உள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கியிருக்கின்றோம்".(அல் கஹ்ப் : 7). تقدم
மனித படைப்பு குறித்த விவகாரத்தில் இரு பகுதிகள் காணப்படுகின்றன:
முதலாவது : மனிதனுடன் தொடர்பான பகுதி : சுவர்க்கத்தை அடைந்து கொள்ளும் பொருட்டு அல்லாஹ்வுக்கு -கட்டுப்பட்டு- வணக்கத்தை நிறைவேற்றல். இது குறித்து தெளிவாக இறைவசனங்கள் மூலம் அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது : படைப்பாளனுடன் தொடர்பான பகுதி : இது இறைபடைப்பின் நுட்பத்துடன் தொடர்பானது. அதாவது இறைபடைப்பின் நுட்பம் அவனுக்கே உரிய விவகாரம் என்பதையும், இது படைப்பினங்களுக்குரிய ஒரு விவகாரம் அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எமது அறிவோ வரையறுக்கப்பட்டது, குறைவானது. அதே வேளை அல்லாஹ்வின் அறிவு நிறைவானதும் முழுமையானதுமாகும். ஆகவே, மனிதன், மரணம், மரணத்தின் பின் மீண்டும் உயிர்பிக்கப்படுதல், மறுமை வாழ்வு ஆகியன அவனின் படைப்பில் மிகச்சிறிய ஒரு பகுதியாகும். இதுவும் அவனின் அதிகாரத்திற்கு உட்பட்ட விவகாரமாகும். மாறாக அவனின் படைப்புகளான மலக்குகள் (அமரர்கள்) அல்லது மனிதன் மற்றும் ஏனையோரின் விவகாரமல்ல என்ற யதார்தத்தை புரிந்து கொள்ளல் வேண்டும்.
ஆதமை இறைவன் படைக்கும் போது மலக்குகள் இது குறித்து கேட்க அதற்கான தெளிவானதும் முடிவானதுமான ஒரு பதிலை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதை நாம் பின்வரும் வசனத்தில் காணுகிறோம்.
"(நபியே) இன்னும் உமது இரட்சகன் வானவர்களிடம் 'நிச்சயமாக பூமியில் நான் ஒரு தலைமுறையை தோற்றுவிக்கப்போகின்றேன்' என்று கூறியபோது: நாம் உம் புகழைத் துதித்துக்கொண்டும், உன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டுமிருக்க, அதில் குழப்பத்தை விளைவித்து இரத்தங்களை சிந்துவோரையா தோற்றுவிக்கப்போகின்றாய் ? என்று அவர்கள் கூறினார்கள். அதற்கவன் நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் நன்கறிவேன் எனக் கூறினான்". (பகரா : 30). تقدم
இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்ட 'மலக்குகள் அறியாதவற்றை அவன் அறிகிறான்' என்ற மலக்குகளுக்கு அளித்த பதிலில் பல விடயங்கள் தொக்கி நிற்கிறது அவைகள் பின்வருமாறு : மனிதப்படைப்பின் நுட்பம் குறித்த விவகாரம் அல்லாஹ்வுடன் மாத்திரம் தொடர்பானது. இது குறித்த ஒட்டு மொத்த விடயமும் அல்லாஹ்வின் செயலாகும். இதில் படைப்பினங்களுக்கு எவ்விதத் தொடர்பபும் கிடையாது. "அல்லாஹ் நாடியதை செய்யக்கூடியவனாவான்" (அல்புரூஜ் : 16) எனவே அவன் செய்பவற்றைப் பற்றி எவருமே அவனை விசாரிக்க முடியாது. எனினும், மனிதர்களாகிய அவர்களே (அவரவர்களுடைய செயலைப் பற்றி) விசாரிக்கப்படவிருப்போர் ஆவார். (அல் அன்பியா :23). மனிதப் படைப்பிற்கான காரணம் அல்லாஹ்வின் அறிவோடு மாத்திரம் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகும். இதை மலக்குகள் கூட அறிய மாட்டார்கள். இந்த விடயமானது அல்லாஹ்வின் முழுமையான அறிவுடன் தொடர்பானதாக இருப்பதால் அதன் நுட்பம் மற்றும் காரணம் குறித்து அவனே மிகவும் அறிந்தவன். அவனின் (படைப்பில் அவனது அனுமதியின்றி எவரும் இதன் உண்மை நிலையை அறிய மாட்டார்கள். تقدم تقدم