இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்றாக தொழுகையை ஆக்கி, தொழுமாறு கட்டளையிட்ட தனது இரட்சகனுக்கு கடடுப்பட்டு நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு முஸ்லிம் தொழுகையை நிறைவேற்றுகிறான்.
ஒரு முஸ்லிம் தினமும் காலை ஐந்து மணிக்கு தொழுகைக்கு எழுவார். முஸ்லிமல்லாத அவரின் நண்பர்கள் அதே நேரத்தில் காலை உடற்பயிற்சிக்கு எழுவார்கள். முஸ்லிமின் தொழுகையானது உடல் மற்றும் ஆன்மீகரீதியான ஊட்டமாக அமையும், அதே நேரத்தில் அவர்களின் உடற்பயிற்சி உடலுக்கான ஊட்டமாக மாத்திரமே அமையும். ஒரு முஸ்லிம் இறைவனிடம் தனது தேவைகளை கேட்கும் பிரார்த்தனையை விட்டும் தொழுகை வித்தியாசமானது. இப்பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் எப்போதும் மேற்கொள்ளலாம். இதற்கு ருகூஊ ஸுஸுத் போன்றவைகள் தேவையில்லை.
ஆன்மாவை பட்டினியில் வதைத்து நம் உடம்பை கட்டாக வைத்துக் கொள்வதில் நாம் எவ்வளவு கவனம் செலுத்துகிறோம் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இதன் விளைவுதான் உலகில் மிகவும் வசதி படைத்தவர்களின் எண்ணற்ற தற்கொலைகள் நிகழ்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.!
வழிபாடுகள் மூளையில் உள்ள உணர்வு மையத்தில் உள்ள உணர்வை ரத்து செய்ய வழிவகுக்கும். இது சுய உணர்வு மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் உணர்வு ஆகியவற்றுடன் தொடர்புடையது. எனவே இதனால் ஒரு நபர் தன்னை ஒரு உயர்நிலை அடைந்ததை உணருவார். ஆகவே இது ஒரு வகை உணர்வாகும். இதனை அனுபவித்தவர் தவிர வேறு யாருக்கும் புரிந்து கொள்ள முடியாது.
வழிபாடுகள் மூளையில் உணர்வு மையங்களை இயக்குகின்றன. எனவே இதன்மூலம் கோட்பாட்டுரீதியான தகவல்களாகவும் சடங்குகளாகவும் இருந்த நம்பிக்கை அகநிலை உணர்ச்சி அனுபவங்களாக மாற்றம் பெருகின்றன. தந்தை தன் மகன் பயணத்திலிருந்து வீட்டிற்கு திரும்பியதும், அவனை வார்த்தை மூலம் வரவேற்பதால் மாத்திரம் திருப்தியடைவாரா? இல்லை மாறாக அவனை கட்டியணைத்து முத்தமிடும் வரையில் அவரின் மனம் திருப்தியடையாது என்பதே உண்மையாகும். நம்பிக்கைகளையும், கருத்துக்களையும் உணர்வு பூர்வமாக பிரதிபலிப்பதில் மனதுக்கு உள்ளார்ந்த விருப்பம் உண்டு. இந்த விருப்பத்தைத் பூர்த்தி செய்யவே வணக்க வழிபாடுகள் வந்துள்ளன. ஆகவே தொழுகை நோன்பு போன்ற கடமைகளில் கட்டுப்படுதலும் கீழ்ப்படிதலும் அடங்கியுள்ளன.
டாக்டர் ஆண்ட்ரூ நியூபெர்க் (அமெரிக்காவின் பென்ஸிலோனியா பல்கழகத்தின் ஆன்மீக ஆய்வுகளுக்கான மைய்யத்தின் இயக்குனர்) கூறுகிறார்: 'உடல்,மனம் மற்றும் உளவியல் ரீதியாக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், அமைதி மற்றும் ஆன்மிக உயர்வை அடைவதிலும் (இபாதத்) வணக்கவழிபாடுகள் பெரும் பங்கு வகிக்கிறன, படைப்பாளனிடம் திரும்புவது அதிக அமைதி மற்றும் மேன்மைக்கு வழிவகுக்கிறது'. அமெரிக்காவின் பென்ஸிலோனியா பல்கழகத்தின் ஆன்மீக ஆய்வுகளுக்கான நிலையத்தின் இயக்குனர்