படைப்பாளன் ஒருவன் என்றும் அவனை மாத்திரமே வணங்கி வழிப்படுவது என்றும், முஹம்மத் அவனின் அடியாரும் தூதருமாவார் என ஒப்புக்கொண்டு சான்று பகர்வதாகும்.
தொழுகையின் மூலம் அகிலங்களின் இரட்சகனானுடன் தொடர்பில் எப்போதும் இருத்தல்.
நோன்பு நோற்பதன் மூலம் ஒருவரின் விருப்பத்தையும் சுயக்கட்டுப்பாட்டையும் வலுப்படுத்துவதும், மற்றவர்களுடன் இரக்கம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை விருத்திசெய்து கொள்வதுமாகும்.
ஸகாத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு தனது சேமிப்புச்செல்வத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சாதாரண விகிதத்தை செலவு செய்வதாகும். ஸகாத் என்பது ஒரு வணக்கமாகும். அது கஞ்சத்தனம், உலோபித்தனம் ஆகிய குணங்களை களைந்து ஈதல் மற்றும் கொடை கொடுத்தல் போன்ற உயரிய பண்புகள் குடிகொள்ள வகைசெய்கிறது.
மக்காவிற்கு ஹஜ் யாத்திரை செல்வதன் மூலம் அனைத்து இறைவிசுவாசிகளும் ஒரே உணர்வுடன் ஒரே வகையான கிரியைகளை நிறைவேற்றுவதன் மூலம் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் முழுமையாக இறைவழிபாட்டில் திலைத்திருப்பதாகும். இந்தக் கடமையானது வித்தியாசமான மனித உறவுகள், கலாச்சாரங்கள், மொழிகள், தராதரங்கள் மற்றும் நிறங்கள் ஆகியவற்றுக்கு அப்பால் படைப்பாளனான அல்லாஹவின் பால் முன்னோக்கிச் செல்வதில் அனைவரும் சமம் எனும் ஒற்றுமையின் குறியீட்டைப் பிரதிபலிப்பதாகக் காணப்படுகிறது.