முஸ்லிம் பன்றி இறைச்சியை உட்கொள்ளாது இருப்பது ஏன்?

அல்லாஹ் எமக்கு ஆரோக்கியமான, நல்லனவற்றை சாப்பிடுவதற்கு அனுமதித்து, ஆரோக்கியமற்ற அருவருப்பானவற்றை சாப்பிடுவதற்கு தடை விதித்தமை படைப்பினங்களுடனான அவனின் கருணை மற்றும் அன்பின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.

"(ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத (நம்) தூதராகிய இந்த நபியைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் தங்களிடமுள்ள தௌறாத்திலும், இன்ஜீலிலும் இவருடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். நல்லவற்றையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். மேலும், அவர்களது சுமையையும் அவர்கள் மீதிருந்த (கடினமான சட்ட) விலங்குகளையும் (இறைவனின் அனுமதி கொண்டு) நீக்கிவிடுவார். ஆகவே, எவர்கள் அவரை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவரை பலப்படுத்தி அவருக்கு உதவி செய்து, அவருக்கு இறக்கப்பட்ட பிரகாசமான (இவ்வேதத்)தைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்". (அல் அஃராப் : 157). تقدم

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பலர் தாம் இஸ்லாத்தை தழுவுவதற்கு பன்றியே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விலங்கு மிகவும் அசுத்தமானது, உடலுக்கு பல நோய்களை ஏற்படுத்துகிறது என்பது அவர்களுக்கு முன்பே தெரிந்திருந்தனால், அவர்கள் அதை சாப்பிட தயங்கினார்கள். முஸ்லிம்கள் தங்கள் வேதத்தை புனிதப்படுத்தி அதனை வணங்குவதனால் அதில் பன்றி இறைச்சி புசிப்பது தடை என குறிப்பிடப்பிடப்பட்டிருப்பதே காரணம் என்பதனால் அவர்கள் உண்பதைத் தவிர்த்து வருகிறார்கள் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், பன்றி இறைச்சி அசுத்தமான விலங்கு எனவும் அதன் இறைச்சி ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது, என்பதால்தான் அவர்கள் உட்கொள்வதைத் தவிர்ந்துகொண்டார்கள் என்பதை உணர்ந்த வேளைதான் இந்த மார்க்கத்தின் மகத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் :

"(நம்பிக்கையாளர்களே!) தாமாக செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவை ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆதலால், எவரேனும் வரம்பு மீறாமலும், பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் இருந்து (இவற்றைப் புசிக்க) நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டால் (அது) அவர் மீது குற்றமாகாது. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன்". (அல்பகரா:173). تقدم

பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் பன்றி இறைச்சி உண்பது தடை என குறிப்பிடப்பட்டுள்ளது.

'பன்றியின் குழம்பு விரிகுழம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும் அது அசைபோடாது. அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். இவைகளின் மாமிசத்தை சாப்பிடாமலும் இவைகளின் உடலைத்தொடாமலும் இருப்பீர்களாக. அது உங்களுக்கு தீட்டாகும்'. (லேவியராகமம் 11:7-8). تقدم

'பன்றியின் குழம்பு விரிகுழம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது, அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது'. (உபாகமம் 8:14). تقدم

புதிய ஏற்பாட்டில் இயேசுவே கூறியது போல் மோசேயின் சட்டமும் இயேசுவின் சட்டமே என்பது இதன் மூலம் அறியமுடிகிறது.

'நான் நியாயப்பிரமாணத்தையோ தீர்க்கதரிசிகளையோ ஒழிக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; நான் அவற்றை ஒழிக்க வரவில்லை, அவற்றை நிறைவேற்ற வந்தேன். வானமும் பூமியும் அழியும் வரை, நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு துளியும் இல்லை, ஒரு புள்ளியும் இல்லை , அனைத்தும் நிறைவேறும் வரை நியாயப்பிரமாணத்திலிருந்து கடந்து போகும்; ஆகையால், இந்தக் கட்டளைகளில் மிகக் குறைவான ஒன்றைத் தளர்த்தி, மற்றவர்களுக்கு அதைச் செய்யும்படி கற்பிப்பவன் பரலோகராஜ்யத்தில் சிறியவன் என்று அழைக்கப்படுவான், ஆனால் அவற்றைச் செய்து அவற்றைக் கற்பிப்பவன் பெரியவன் என்று அழைக்கப்படுவான்'. (மத்தேயு 5:17-19). تقدم

இந்த அடிப்படையில் யூத மதத்தில் பன்றி இறைச்சி தடைசெய்யப்பட்டது போன்று கிறிஸ்தவ மதத்திலும் தடைசெய்ப்பட்டுள்ளது என்பது புரிகிறது.

PDF