உணவுக்காக அறுக்கப்படும் மிருங்கள் மனித உயிர்போன்றதல்லவா?

விலங்குகளின் உயிருக்கும் மனிதர்களின் உயிருக்கும் மிகப்பெரும் வேறுபாடு உள்ளது. ஒரு விலங்கின் உயிரானது அதன் உடலை இயக்கும் உந்து சக்தியாகும். அது மரணத்தின் மூலம் வெளியேறும் போது, உடல் உயிரற்றதாகி, வெறும் சடலமாக மாறிவிடுகிறது. அதாவது இது வாழ்க்கையின் ஒரு பகுதியைக் குறிக்கிறது. தாவரங்கள் மற்றும் மரங்கள் கூட வாழ்க்கையின் வடிவத்தைக் கொண்டுள்ளன. ஆனால் அது ஒரு உயிர் என்று குறிப்பிடப்படவில்லை. மாறாக, தண்ணீரின் உதவியுடன் அதன் உற்பகுதி வழியாக ஓடுவதனால் உயிர் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் தண்ணீர் இல்லாமல் போனால் செடி வாடி விழுந்துவிடும்.

''உயிருள்ள அனைத்தையும் நீரிலிருந்தே நாம் படைத்தோம், அவர்கள் நம்ப வேண்டாமா?''. (அன்பியாஃ : 30). تقدم

இருப்பினும் அவை சிறப்பித்தல் மற்றும் கண்ணியப்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக அல்லாஹ்வுடன் இணைக்கப்பட்ட மனித உயிர் போன்றது அல்ல. அதன் யதார்த்தம் குறித்து அல்லாஹ் மட்டுமே அறிவான், மேலும் அது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். மனித ஆன்மா –உயிர்- என்பது ஒரு தெய்வீக ஆணை, அதன் மூலத்தைப் மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தேவை கிடையாது. அதாவது மனித உடலை இயக்குவதற்காக சக்தி ஒருங்கிணைந்து, அதனோடு சேர்த்து சிந்தனை (மனம்), புரிதல், அறிவு மற்றும் நம்பிக்கை ஒன்றாக கலந்த நிலையாகும், இவை தான் விலங்குகளின் உயிரிலிருந்து –ஆன்மாவிலிருந்து- மனித ஆன்மாவை வேறுபடுத்துகிறது.

PDF