இஸ்லாத்தில் மிருகங்களை அறுக்கும் முறை மனிதாபினாமற்றதாக கருதப்படாதா?

கூர்மையான கத்தியினால் அறுவைமிருகத்தின் உணவுக் குழாயையும், மூச்சுக் குழாயையும் மிக வேகமாக வெட்டி விடுவதே இஸ்லாத்தின் அறுப்பு முறையாகும். இந்த முறை மிருகங்கள் நோவினைப்படுவதற்கு காரணமாக அமையும் மின்அதிர்வு, மற்றும் கழுத்தை நெரித்துக் கொல்லல் போன்ற வழிமுறைகளை விடவும் கருணை நிறைந்தது. மூளைக்கான இரத்த ஓட்டம் தடைபட்டால், விலங்கு வலியை உணராது. ஒரு மிருகம் அறுக்கப்படும்போது ஏற்படும் துடிப்புக்கு வலி காரணம் அல்ல, மாறாக இரத்தத்தின் விரைவான வெளியேற்றமே இதற்கான காரணமாகும். இவ்வாறு துடிப்பது உடலில் இருந்து இரத்தம் முழுமையாக வெளியேற உதவுகிறது. இது விலங்குகளின் உடலுக்குள் இரத்தத்தை உரைய வைக்கும் ஏனைய அறுப்பு முறைகளுக்கு மாற்றமானது. இரத்தம் வெளியேறாத நிலையில் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியை புசிப்போரின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''நிச்சயமாக அல்லாஹ் எல்லா விடயங்களையும் மிகவும் அழகிய முறையில் செய்ய வேணடும் என விதித்துள்ளான். ஆகவே நீங்கள் கொலை செய்தால் அழகிய முறையில் கொல்லுங்கள். நீங்கள் ஒரு மிருகத்தை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். எனவே உங்களில் அறுக்கும் ஒருவர் தனது கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளட்டும், அறுவைப் பிராணிக்கும் ஆருதலைக் கொடுக்கட்டும்'. அறுக்கும் மிருகங்களின் கஷ்டங்களை எளிதாக்கக்கட்டும்". (ஆதாரம் : முஸ்லிம்). تقدم

PDF