ஒரு மனிதரைப் பொருத்தவரை ஏதோ ஒரு கடவுளை அவன் ஏற்றாக வேண்டும். அது உண்மைக் கடவுளாகவோ அல்லது (பொய்யான) கடவுளாகக்க கூட இருக்கலாம். அதனை கடவுள் என்றோ அல்லது வேறு ஏதாவது பெயர் கொண்டோ அழைக்கலாம், அதாவது அவர்கள் ஏற்றுக்கொண்ட அக்கடவுள் சிலவேளை ஒரு மரமாக, வானத்தில் உள்ள ஒரு நட்சத்திரமாக, ஒரு பெண்ணாக, தனக்கு தொழிலொன்றை அளித்த தலைவராக, அறிவியல் கோட்பாடாக, ஏன் தனது மனோ இச்சையாகக் கூட இருக்கலாம். ஆனால்; மனிதன் என்ற வகையில் ஏதோ ஒன்றை விசுவாசித்து அதனை ஏற்றுப்பின்பற்றி, புனிதப்படுத்தி வாழ்க்கைப் பயணத்தின் எல்லா நிலைகளிலும் அதனிடம் சரணடைந்து அதற்காகவே சில வேளை இன்னுயிரையும் மாய்த்துக் கொள்ளும் ஆழமான நம்பிக்கை நிலை இருக்க வேண்டும். இவ்வாறு ஒன்றை நம்பி தன்னை மாய்த்துக்கொள்ளும் நிலையையே நாம் வணக்கவழிபாடு என்ற பெயரால் அழைக்கிறோம். எனவே உண்மைக்கடவுளை -இறைவனை- வணங்கி வழிபடுதல் ஒரு மனிதன் மற்றவர்களுக்கு அல்லது சமூகத்திற்கு அடிமைப்படுவதிலிருந்து விடுதலையை பெற்றுத் தருகிறது.