இஸ்லாம் குறித்த கேள்வி பதில்

இந்த புத்தகம் இஸ்லாம் மார்க்கம் பற்றிய பொதுவான கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம், இம்மாபெரும் மார்க்கத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதையும், காலவோட்டத்தில் பல்வேறுபட்ட நாகரிகங்கள் மற்றும் மக்களை உள்வாங்கி, சமகால நிகழ்வுகளுடனும், முன்னேற்றங்களுடன் ஒன்றித்துத் செல்வதில் அதன் தனித்துவம், வேறுபாடு மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகிய விடயங்களைக் குறித்துக்காட்டுவதையும், இம்மாபெரும் மார்க்கத்தின் முகவரியை கொச்சைபடுத்தி சிதைக்கும் பல முயற்சிகள் இருக்கும் நிலையில் இம்மார்க்கத்தின் நீடித்து நிலைக்கும் திறனை எடுத்துக் காட்டுவதையும், இம்மார்க்கத்தை பயங்கரவாதம் என வர்ணித்து இதற்கெதிராக மக்களை தூண்டும் பயங்கரமான எதிர்மறை பிரச்சாரத்தை எதிர்கொண்டு வெற்றி வாகை சூடும் திறன் இம்மார்க்கத்திற்கு உண்டு என்பதைத் தெளிவு படுத்துவதையும் இந்நூல் இலக்காகக் கொள்கின்றது.

ஒரு மனிதரைப் பொருத்தவரை ஏதோ ஒரு கடவுளை அவன் ஏற்றாக வேண்டும். அது உண்மைக் கடவுளாகவோ அல்லது (பொய்யான) கடவுளாகக்க கூட இருக்கலாம். அதனை கடவுள் என்றோ அல்லது வேறு ஏதாவது பெயர் கொண்டோ அழைக்கலாம், அதாவது அவர்கள் ஏற்றுக்கொண்ட அக்கடவுள் சிலவேளை ஒரு மரமாக, வானத்தில் உள்ள ஒரு நட்சத்திரமாக, ஒரு பெண்ணாக, தனக்கு தொழிலொன்றை அளித்த தலைவராக, அறிவியல் கோட்பாடாக, ஏன் தனது மனோ இச்சையாகக் கூட இருக்கலாம். ஆனால்; மனிதன் என்ற வகையில் ஏதோ ஒன்றை விசுவாசித்து அதனை ஏற்றுப்பின்பற்றி, புனிதப்படுத்தி வாழ்க்கைப் பயணத்தின் எல்லா நிலைகளிலும் அதனிடம் சரணடைந்து அதற்காகவே சில வேளை இன்னுயிரையும் மாய்த்துக் கொள்ளும் ஆழமான நம்பிக்கை நிலை இருக்க வேண்டும். இவ்வாறு ஒன்றை நம்பி தன்னை மாய்த்துக்கொள்ளும் நிலையையே நாம் வணக்கவழிபாடு என்ற பெயரால் அழைக்கிறோம். எனவே உண்மைக்கடவுளை -இறைவனை- வணங்கி வழிபடுதல் ஒரு மனிதன் மற்றவர்களுக்கு அல்லது சமூகத்திற்கு அடிமைப்படுவதிலிருந்து விடுதலையை பெற்றுத் தருகிறது.... More

உண்மையான கடவுள் படைப்பாளர் ஆவார். ஆக, உண்மையான கடவுள் அல்லாது பிறிதொன்றை வழிபடுவது அவர்களும் கடவுள்கள் என்று வாதிடுவதை பொதிந்திருக்கிறது. மேலும் கடவுள் ஒரு படைப்பாளராக இருக்க வேண்டும். கடவுள் படைப்பாளர் என்பதற்கான சான்று, அவர் பிரபஞ்சத்தில் படைத்திருப்பதை பார்ப்பதன் மூலம்; அல்லது தான் படைப்பாளர்-சிருஷ்டி கர்த்தா என நிரூபணமான கடவுளின் இறைச்செய்தி மூலம் இருக்கும். அவ்வாறு இவர்கள் கூறும் கடவுள் பற்றிய இக்கூற்றுக்கு கற்புலனாகும் இந்ந பிரபஞ்சத்தின் உருவாக்கத்தில் இருந்தோ அல்லது படைத்த கடவுளின் வார்த்தைகளில் இருந்தோ ஆதாரம் இல்லை என்றால் வணங்கப்படும் இந்தக் கடவுள்கள் யாவும் பொய்யானவையே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.... More

மத்திய கிழக்கில் வாழும் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் யாவரும் அல்லாஹ் என்ற வார்த்தையை கடவுளுக்குப் பயண்படுத்துகின்றனர். இது 'உண்மையான ஏக இறைவனைக் குறிக்கிறது. அல்லாஹ்வே மூஸா மற்றும் ஈஸாவின் (அவர்கள் இருவருக்கும் சாந்தி உண்டாவதாக) கடவுளாவான். அல்லாஹ் தனது திருமறை அல் குர்ஆனில் 'அல்லாஹ்' என்ற பெயராலும் மற்றும் வேறு (அழகிய) பெயர்கள் பண்புகளாலும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளான். பைபிளின் பழைய ஏற்பாட்டில் பழைய பிரதியில் 89 தடவைகள் அல்லாஹ் என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது.... More

இக்கேள்வியானது "படைப்பாளன் படைப்பினங்களுக்கு ஒப்பானவன்" என்ற தவறான கருதுகோளின் -யூகத்தின்- விளைவாக எழுந்ந கேள்வியாகும். இக்கருதுகோளானது பகுத்தறிவு ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும் நிராகரிக்கப்பட்டதாகும். அதனை பின்வருமாறு தெளிவுபடுத்திட முடியும்.... More

படைப்பாளனை நம்புவது என்பது எந்தப் பொருட்களும் எவ்விதக்காரணமுமின்றி தோற்றம் பெற முடியாது (காரணமின்றி காரியமில்லை) என்ற அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. உயிரினங்களால் நிரம்பியிருக்கின்ற இம்மாபெரும் பிரபஞ்சமும் அதில் உள்ள உயிரினங்களும் கண்ணுக்குப் புலனாகா (தொட்டுணர முடியா) உணர்வைக் கொண்டுள்ளன என்பதையும் சடப்பொருளல்லாத கணிதவியல் கோட்பாட்டு விதிகளுக்கு உட்படுகின்றன என்பதைக் குறிப்பிட தேவையில்லை. வரையறுக்கப்பட்ட பொருளான பிரபஞ்சத்தின் இருப்பை விளக்குவதற்கு, நமக்கு ஒரு தனியான ஆதாரம் தேவைபடுகிறது.... More

நாம் எமது வெற்றுக்கண்களால் வானவில் மற்றும் காணல் நீரைக் காண்கிறோம். ஆனால் அதற்கென்று ஒரு இருப்பு அல்லது யதார்த்தம் கிடையாது! ஆனால் வெறுமனே இயற்கை விஞ்ஞானம் புவியீர்ப்பு விசை இருப்பதை நிரூபித்திருப்பதால் அதனை நாம் காணமலே நம்புகிறோம். இதே போல் கடவுளை (இறைவனை) நம் வெற்றுக் கண்களுக்கு புலப்படவில்லை என்பதால் அவன் இருப்பை மறுக்க முடியாவதல்லவா?... More

விளக்கத்திற்காக மாத்திரம்- உயர்வான பண்பு அல்லாஹ்விற்கு மாத்திரமே- ஒரு உதாரணத்தை குறிப்பிடுகிறேன். ஒரு மனிதன் இலக்ட்ரோனிக் கருவியொன்றை பயன்படுத்தும் வேளை அவன் அதனை வெளியிலிருந்தே கட்டுப்படுத்துகிறான். இயக்குகிறான். அவன் ஒரு போதும் எந்த நிலையிலும் அதனுள் போவதில்லை என்பதை நாம் அறிவோம்... More

மனித சட்டத்தில் அரசனின் அல்லது அதிகாரம் படைத்தோரின் உரிமையை மீறுவது ஏனைய குற்றங்களுக்கு சமமானது அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். இவ்வாறு மனித சட்டமே அதிகாரம் பெற்ற மனிதனின் உரிமையை மீறி நடக்கும் போது அதனை மிகப்பெரும் குற்றமாக கருதும் போது அரசர்களுக்கு எல்லாம் அரசனான அல்லாஹ்வின் உரிமையை மீறுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. ஆகவே நபியவர்கள் குறிப்பிட்டது போன்று அடியார்கள் அல்லாஹ்வுக்கு- இறைவனுக்கு- செலுத்த வேண்டிய கடமை அவனை மாத்திரம் வணங்கி வழிபடுவதாகும் . இது குறித்து அவர்கள் குறிப்பிடுகையில் "அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை அவனை வணங்கி வழிபடுவதுடன் அவனுக்கு எதனையும் இணைவைக்காது இருப்பதுமாகும். இக்கடமையை அடியார்கள் நிறைவேற்றினால் அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி உனக்குத் தெரியுமா? என கேட்க, அதற்கு நான் இது குறித்து மிகவும் அறிந்தோர் அல்லாஹ்வும் அவனின் தூதருமாவார்கள். என்றேன். அதற்கு நபியவர்கள்: அடியார்களை வேதனை செய்யாது நரகத்திலிருந்து காப்பதுதான் அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய வேண்டிய கடமை" என்று நபியவர்கள் கூறியதாக முஆத் (ரலி) கூறினார்கள்.... More

அகில உலகங்களின் இரட்சகனான அல்லாஹ் தன்னைப் பற்றி குறிப்பிடுகையில் 'நாங்கள்' என்று அல்குர்ஆன் வசனங்களின் பயன்படுத்துவதானது, அவன் மாத்திரமே மேன்மை மற்றும் அழகு ஆகிய பண்புகளில் முழுவைதையும் ஒன்று சேர பெற்றிருப்பதினாலாகும். அரபு மொழியில் இப்பிரயோகம் பலம் -சக்தி- வல்லமை மேன்மை போன்ற அர்த்தத்தைக் காட்டவல்லது. அதே போல் ஆங்கில மொழியில் நாம் என்பது உடமை, சொந்தம், அதிகாரம் போன்ற கருத்தைக் காட்டும். அதாவது பன்மை பிரதிப் பெயரானது உயர் பதவியில் உள்ள நபரை சுட்டிக்காட்ட பயன் படுத்தப்படுகிறது. (உதாரணத்திற்கு அரசர், இளவரசர் அல்லது அதிகாரம் படைத்தவர்) என்றாலும் அல்குர்ஆன் எப்போதும் வணக்கம் வழிபாடு தொடர்பானவற்றில் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை கடுமையாக வலியுறுத்துவதைக் காணமுடியும்.... More

"சத்தியம் உங்களின் இரட்சகனிடமிருந்தே வந்துள்ளது. ஆகவே விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும், விரும்பியவர் நிராகரிக்கட்டும் என்று கூறுவீராக". (அல் கஹ்ப் : 29). تقدم... More

இதனை உதாரணம் ஒன்றின் மூலம் விளக்கலாம். அதாவது ஒரு மனிதன் தன்னை ஒரு பெரிய செல்வந்தனாகவும் தயாள குணமுடையவானாகவும் வல்லாலாக காணும் வேளை அவன் தனது நண்பர்களையும் விருப்புக்குரியவர்களையும் உண்ணவும் பருகவும் அழைப்பான்.... More

மனிதர்கள் இவ்வுலக வாழ்வின் இருப்பை அவர்கள் இல்லாத நிலையில் (இங்கு வர முன்னரே) தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை படைப்பாளன் கொடுக்க விரும்பியிருந்தால் அவர்களின் இருப்புக்கான ஆரம்பம் ஒன்று இருந்திருக்க வேண்டும். மனிதன் இல்லாமையில் இருக்கும் நிலையில் அவனுக்கென்று எப்படி சுய அபிப்பிரயாம் ஒன்று இருந்திருக்க முடியும்;? இங்குள்ள பிரச்சினை இருப்புக்கும் இல்லாமைக்கும் இடையிலான பிரச்சினையாகும். ஒருவருக்கு வாழ்க்கையின் மீதுள்ள பற்றுதலும், அதன் மீதான பயமும் இந்த அருளை அவர் திருப்தியோடு ஏற்றிருப்பதற்கான மிகப்பெரிய சான்றாகும்.... More

மார்க்கம் என்பது ஒரு வாழ்க்கை முறையாகும். அது மனிதனை தனது படைப்பாளன் மற்றும் அவனை சூழவுள்ளவர்களுடனான தொடர்பை ஒழுங்குபடுத்துகிறது. அதுவே மறுமைக்கான ஒரே வழியாகவும் உள்ளது.... More

உணவு மற்றும் குடிபானத்திற்கான தேவையை விட மார்க்கத்தின் தேவை மிகவும் அவசியமாகும். அந்த வகையில் மனிதன் இயல்பிலேயே ஒரு மத(மார்க்க)வாதியாவன். எனவே அவன் சத்திய மார்க்கத்தை ஏற்றுப் பின்பற்றவில்லையெனில் மனிதர்கள் கண்டுபிடித்த சிலைவணக்கம் சார்ந்த மதங்களில் நடந்தது போல,அவனும் புதிதாக ஒரு மார்க்கத்தை உருவாக்கிடுவான். அத்துடன் மனிதனைப் பொருத்தவரை அவனின் மரணத்திற்கு பின்னுள்ள வாழ்வில் எப்படி பாதுகாப்பு தேவையோ அதே போல இந்த உலகத்திலும் அவனுக்கு பாதுகாப்புத் தேவையாகும்.... More

சத்தியமார்க்கமானது இடைத்தரகர்களின் எந்த ஒரு தலையீடுமின்றி படைப்பாளனுடன் மாத்திரம் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடிய மனிதனின் முதல்-ஆரம்ப- உள்ளுணர்வுடன் இணங்கிச் செல்வதாக இருப்பதுடன் மனிதனில் நற்பண்புகளையும் சிறந்த குண இயல்புகளையும் பிரதிபலிக்க வேண்டும்.... More

மனித இனம் அழிந்ததும் நித்திய ஜீவனான அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் இப்பிரபஞ்ஞத்தில் எஞ்சியிருக்காது. மார்க்கத்தின் நிழலின் கீழ் பண்பாடுகளை கடைப்பிடித்து ஒழுகுவது முக்கியமல்ல என்று கூறுபவர் 12 வருடமாக வகுப்பறையில் படித்துவிட்டு இறுதியில் கல்விச் சான்றிதழ் தேவையில்லை என்று கூறுபவருக்கு ஒப்பான ஒருவராகவே கருதப்படுவார்.... More

உண்மையில் பகுத்தறிவின் பங்களிப்பு என்பது நடக்கும் விவகாரகங்களில் தீர்ப்புக்கூறி அதனை உண்மைப் படுத்துவதாகும். உதாரணத்திற்கு பகுத்தறிவு மனித இருப்பின் இலக்கை அடைந்து கொள்ள இயலாமல் இருப்பது அதன் பங்களிப்பை ஒரு பொழுதும் இரத்து செய்துவிடாது. மாறாக தனக்கு புரிந்து கொள்ள இயலாதவற்றை புரிந்து கொள்ள மார்க்கத்திற்கு இதற்கான அவகாசத்தை வழங்குகிறது. மார்க்கமானது படைப்பாளன் பற்றியும் மனிதனின் அடிப்படை குறித்தும் இவ்வுலகின் அவனது இருப்பின் நோக்கம் குறித்தும் கற்றுக் கொடுக்கிறது. இதனை பகுத்தறிவானது புரிந்து தீர்ப்பளித்து அத்தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்கிறது. இதன் மூலம் படைப்பாளனின் இருப்பை ஏற்றுக்கொள்வது ஒருபோதும் பகுத்தறிவைiயும் தர்க்கத்தையும் செயலிழக்கச்செய்து விடாது என்பதே யதார்த்தமாகும்.... More

தற்காலத்தில் அதிகமான மனிதர்கள், ஒளியானது காலத்திற்கு அப்பால் பட்ட ஒரு விடயம் என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் படைப்பாளனான இறைவன் காலம் மற்றும் இடம் ஆகிய விதிகளுக்கு உட்படாதவன் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. அதாவது அல்லாஹ் எல்லாப் பொருட்களும் படைக்கபட முன் ஆரம்ப கர்த்தாவாகவும் எல்லாப் படைப்பினங்களின் இறுதியானவனாகவும் உள்ளான். அவனின் படைப்புக்கள் எதனாலும் அவனை முழுமையாக அறிந்திட முடியாது.... More

உண்மை என்னவென்றால், சன்மார்க்கம் -மதம்- ஒரு கடமையும் பொறுப்பும் ஆகும். அது மனசாட்சியை விழிப்படையச் செய்கிறது, மேலும் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய விஷயத்திலும் தன்னை சுயவிசாரணை செய்து கொள்ளும் படி விசுவாசியை தூண்டுகிறது. விசுவாசி தனக்கும், தன் குடும்பத்துக்கும், தன் அண்டை வீட்டாருக்கும், பாதையில் செல்லும் வழிப்போக்கனுக்கும் கூட பொறுப்பானவனாவான். அவன் தான் விரும்பும் விடயங்களை அடைந்து கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்னர் கடவுளின் மீது அக்காரியங்களை ஒப்படைக்கிறான், இவ்வாறான செயற்பாடு அபினுக்கு அடிமையானோரின் குணாதிசயங்களில் ஒன்று என்று நான் நினைக்கவில்லை. (கலாநிதி அம்ரு ஷரீபின் குராபதுல் இல்ஹாத் -பதிப்பு -2014 (நாஸ்தீக மூடநம்பிக்கை) என்ற நூலிலிருந்து பெறப்பட்டது.). அபின் என்பது ஹெராயின் தயாரிக்கப் பயன்படும் கசகசா செடியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு போதைப் பொருளாகும்.... More

ஏனைய மதங்களிலிருந்து உண்மை மார்க்கத்தை பின்வரும் மூன்று விடயங்களினூடாக வேறுபடுத்தி அறிந்திட முடியும் : تقدم... More

சீரிய இயல்பு –உள்ளுணர்வு அல்லது சீரான பகுத்தறிவு என்ற ஒரு விடயம் உண்டு. சீரிய இயல்புக்கும் தர்க்த்திற்கும் சரியான பகுத்தறிவிற்கும் இணங்கியதாக அமையும் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையே! சிக்கல் நிறைந்தவை அனைத்தும் மனிதனிடமிருந்து வந்தவை என்பதை புரிய வேண்டும்.... More

இஸ்லாத்தின் போதனைகள் யாவும் நெகிழ்வுத்தன்மை வாய்ந்தவையாகவும், அவை வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளது. அத்துடன் அவைகள் யாவும் அல்லாஹ் மனிதனை எந்த இயல்பூக்கத்துடன் படைத்தானோ அதனுடன் இணைந்து செல்வதாகவும் காணப்படுகிறது. இதனடிப்படையில்; இம்மார்க்கம் மனித உள்ளுணர்வுடன் இணைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. அவை பின்வருமாறு :... More

மனித இனத்திற்காக அனுப்பப்பட்ட இறைதூதர்கள் அனைவரையும் எவ்வித வேறுபாடுமின்றி நம்புவது ஒரு முஸ்லிமின் இறைவிசுவாசத்தில் காணப்பட வேண்டிய முக்கிய அடிப்படையாகும். இவ்வாறு அவன் நம்பவில்லையென்றால் அவனின் ஈமான் எனும் இறைவிசுவாசம் சரியானதாக அமையமாட்டாது. தெளிவாகக் குறிப்பிடுவதாயின் அவன் ஒரு முஸ்லிமே அல்ல என்பதுவே இதன் கருத்தாகும். எந்த ஒரு தூதரையோ அல்லது தீர்க்கதரிசியையோ மறுப்பது மார்க்கத்தின் அடிப்படைகளுடன் மோதுகின்ற விடயமாகும். காரணம் அனைத்து நபிமார்களும் -தீர்க்கதரிசிகளும்-இறுதித்தூதரான முஹம்மத் அலைஹிஸ்ஸாம் அவர்களின் வருகையை குறித்து முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள் அதிகமான நபிமார்களையும், ரஸூல்மார்களையும் அல்லாஹ் பல்வேறுபட்ட சமூகங்களுக்கு அனுப்பியுள்ளான், இவர்களின் பெயர்கள் அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு (நூஹ் இப்ராஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக் யஃகூப், யூஸுப், மூஸா, தாவூத், ஸுலைமான், ஈஸா போன்றோர் அவர்களுள் சிலராவர்) மேலும் பல நபிமார்கள் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப் படவில்லை. இந்து மற்றும் பௌத்த மதங்களில் உள்ள ராமர், கிரிஷ்னர், கௌதம புத்தர் போன்ற மதப் பிரதானிகள் யாவரும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளாக இருப்பதற்கு சாத்தியம் இருந்தாலும், அல்குர்ஆனில் அதற்கான எந்த சான்றும் கிடையாது என்பதனால் ஒரு முஸ்லிம் அவர்களை தீர்க்கதரிசி என நம்பமாட்டான். மக்கள் எப்போது அல்லாஹ்வை விட்டுவிட்டு தமக்கு வழிகாட்டியாய் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளை வணங்க தலைப்பட்டதோ அப்போதிருந்தே மதங்களுக்கு மத்தியில் வித்தியாசங்களும், வேறுபாடுகளும் தோன்ற ஆரம்பித்து விட்டன.... More

மலக்குகள் என்போர் அல்லாஹ்வின் மிகப் பிரமாண்டமான ஒரு படைப்பு. அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள், நன்மையான காரியங்களில் ஈடுபடுவதற்கென கட்டமைக்கப்பட்வர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பவர்கள். அல்லாஹ்வை துதிசெய்து கொண்டும் வணங்கிக் கொண்டும் இருப்போர். அவர்கள் சோர்வடையோ, களைப்புரவோ மாட்டார்கள்.... More

அகிலத்தின் புறவய நிகழ்வுகள், ஆதாரங்கள் யாவும் வாழ்க்கையில் எப்போதும் மீள் கட்டமைப்பு மற்றும் மீள் உருவாக்கம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இதற்கான உதாரணங்கள் அதிகமாகும். அவற்றுள் வரண்ட பூமியை மழையால் உயிர்ப்பித்தல் என்பது ஒரு உதாரணமாகும்.... More

அல்லாஹ் முதலில் எவ்வாறு அவர்களை உயிர்கொடுத்து படைத்தானோ அவ்வாறே மீண்டும் அவர்களை உயிர்ப்பிக்கிறான்.... More

அடியார்களுக்கு ஒரே நேரத்தில் உணவளிப்பது போல் அவர்களை மறுமையில் ஒரே நேரத்தில் விசாரிப்பான்.... More

இந்த பிரபஞ்சம் முழுதும் படைப்பாளனான அல்லாஹ்வின் ஆளுகையின் கீழ் உள்ளது. ஆகவே அவன் மாத்திரமே தனது விருப்பத்திற்கு அமைவாக அனைத்தையும் அடிபணியவைக்கக்க கூடிய முழுமையான அறிவையும், ஆற்றளையும், திறனையும் பெற்றுள்ளான். சூரியன், கோள்கள் மற்றும் (விண்மீன் திரள்கள்) பால்வெளிமண்டளங்கள் ஆகியவை படைப்பின் துவக்கம் முதல் மிகத்துல்லியத்துடன் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த நுணுக்கமும் திறனும் மனிதர்களின் உருவாக்கத்திற்குப் பொருந்தும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் மனித உடல்களுக்கும் ஆன்மாக்களுக்கும் இடையே உள்ள ஒருங்கிணைப்பானது, மனித உடலிலிருந்து வெளியேறிய ஆன்மாக்களை –உயிர்களை- விலங்குகளின் உடலில் குடிகொள்ளச் செய்ய முடியாது என்பதையும், தாவரங்கள் மற்றும் பூச்சிகள் அல்லது மனிதர்களிடையே கூட ஊடாடல் செய்ய முடியாது என்பதையும் காட்டுகிறது. மேலும் அல்லாஹ் மனிதனை பகுத்தறிவு மற்றும் அறிவாற்றலால் தனித்துவப்படுத்தி, அவனை பூமியில் ஒரு கலீஃபாவாக -பிரதிநிதியாக- ஆக்கி ஏனைய பல உயிரனங்களை விட அவனை சிறப்பாக்கி கண்ணியப்படுத்தி அவனது அந்தஸ்தை உயர்த்தியுள்ளான். படைப்பாளனான அல்லாஹ் மரணத்தின் பின் மீண்டும் உயிரினங்களை உயிர்த்தெழச் செய்யும் மறுமை நாளை ஏற்படுத்தி உயிரினங்கள் அனைத்தையும் அவன் விசாரித்து தீர்ப்பளிப்பதும், அதன்படி அவர்களின் தலைவிதி சொர்க்கம் அல்லது நரகம் என்பதை தீர்மானிப்பதும், அனைத்து நல்ல மற்றும் கெட்ட செயல்களும் அந்நாளில் மதிப்பிடப்படுவதும் படைப்பாளனான அல்லாஹ்வின் ஞானத்திற்கும் அவனின் நீதிக்குமான சான்றாக அமைந்துள்ளது.... More

உதாரணமாக, ஒரு நபர் கடையில் ஏதாவது வாங்க விரும்பினால், அந்தப் பொருளை வாங்குவதற்கு தனது மூத்த மகனை அனுப்ப முடிவு செய்வார், காரணம் அவரின் அந்த மகன் புத்திசாலி என்றும் அவர் உடனே சென்று தந்தை விரும்புவதை வாங்குவார் என்றும் அவருக்கு முன்பே தெரியும். ஆனால்அவரின் அடுத்த மகனைப் பொருத்தவரை தனது நண்பர்களுடன் விளையாடுவதில் ஈடுபட்டு பணத்தை தொலைத்து விடுவார் என்பதனால் அவரிடம் இப்பொறுப்தை ஒப்படைக்க விரும்பமாட்டார். இது உண்மையில் ஒரு அனுமானத்தின் அடிப்படையில் தந்தை தனது தீர்ப்பை கட்டமைத்துள்ளார் என்பது புரிகிறது.... More

உண்மையில் உலக வாழ்வின் அடிப்படை இலக்கு தற்செயலாக உணர்வு பிரவாகிக்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பது அல்ல. மாறாக அல்லாஹ்வை –கடவுளை- அறிந்து அவனுக்கு வழிப்படுவதன் ஊடாக அடைந்து கொள்ளும் ஆழமான அக நிம்மதியை எய்துகொள்வதாகும்.... More

பரீட்சையானது புதிய கல்வி வாழ்வை எதிர்கொள்வதற்காக, மாணவர்களின் தராதரத்தை மதிப்பிட்டு வேறுபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். பரீட்சை குறுகியதாக இருந்தாலும், புது வாழ்வை எதிர் நோக்கியிருக்கும் மாணவரின் தலைவிதியை அது தீர்மானிக்கிறது. அதேபோன்று தான் மறுமை வாழ்வை முனனோக்கிச் செல்வோரின் தராதரத்தை வேறுபடுத்துவதற்காக இவ்வுலக வாழ்வு மனிதர்களுக்கான தேர்வாகவும் சோதனை களமாகவும் இருக்கிறது. உண்மையில் மனிதன் அவன் திரட்டிவைத்த பொருட்களுடன் இவ்வுலகைவிட்டு பிரிந்து செல்லாது தான் செய்த நல்வினைகளுடனும் செயற்பாடுகளுடனுமே பிரிந்து செல்கிறான். ஆகவே மறுமை வாழ்வையும், அங்கு கிடைக்கவிருக்கும் வெகுமதியையும் நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் என்பதை மனிதன் புரிந்துகொள்வது அவசியமாகும்.... More

அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிந்து, அவனுக்குக் கட்டுப்பட்டு, அவனின் விதியை ஏற்றுக்கொள்வதன் மூலமே மனிதனுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது.... More

ஆம், இஸ்லாம் அனைவருக்கும் சாத்தியமானது. இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் உண்மை மார்க்கத்தில் அல்லாஹ்வுக்கு அடிபணிந்த நிலையில் எவ்வித இடைத்தரகருமின்றி முஸ்லிமாகவே பிறக்கின்றனர். அந்தக் குழந்தையானது தனது குடும்பம், அல்லது பாடசாலை அல்லது எந்த மத அமைப்புக்களினதும் தலையீடுகளுமின்றி பருவ வயதை அடையும் வரையில் நேரடியாக அல்லாஹ்வையே வணங்கிக் கொண்டிருக்கிறது. அவன் பருவவயதை அடைந்ததும் தனது செயல்களுக்கு பொறுப்புக் கூறக்கூடியவனாகவும் அது குறித்து விசாரணைக்குட்படக்கூடியவனாகவும் மாறிவிடுகிறான். அந்தக் குழந்தை பருவவயதை அடைந்தபின் ஈஸாவை தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக ஏற்றுக்கொள்வதன் மூலம் அவன் கிறிஸ்தவனாகவும், புத்தரை மத்தியஸ்தராக எடுத்துக்கொள்வதன் மூலம் பௌத்தனாகவும், கிரிஷ்னனை தனது மத்தியஸ்தராக எடுத்துக்கொள்வதன் மூலம் ஒரு இந்துவாகவும் மாறிவிடுகிறான். அல்லது முஹம்மதை மத்தியஸ்தராக ஏற்று இஸ்லாத்திலிருந்து முற்றிலும் விலகி நடப்பதற்கோ, அல்லது அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி இயற்கை மார்க்கத்தில் நிலைத்திருக்க்கூடியவானகவோ மாறிவிடுகிறான். முஹம்மத் நபியவர்கள் தனது இரட்சகனிடமிருந்து கொண்டுவந்த இறைத்தூதைப் பின்பற்றுவர் சீரிய இயல்புணர்வுக்கு ஒத்துப்போகும் உண்மை மார்க்கத்தையே பின்பற்றுகிறார். இது தவிர அனைத்துக் கொள்கைகளும் வழிகேடும் நெறிபிறழ்வுமாகும். உதாரணத்திற்கு மனிதனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் முஹம்மதை மத்தியஸ்தராக எடுத்துக்கொண்டாலும் சரியே!... More

படைப்பாளனான அல்லாஹ்விடமிருந்து கிடைத்த உண்மை மார்க்கம் ஒன்றே தவிர வேறொன்றும் இல்லை. அந்த சத்திய மார்க்கமானது ஏகனும் தனித்தவனுமான படைப்பாளனை விசுவாசித்து அவனை மாத்திரமே வணங்குவதுமாகும். இவை தவிரவுள்ள அனைத்தும் மனிதனால் கண்டுபிடிக்கப் பட்டவைகளாகும். உதாரணத்திற்கு நாம் இந்தியாவுக்கு சென்று அங்கிருக்கும் மக்கள் மத்தியில் இறைவன் ஒருவனாவான் என்று கூறினால் அவர்கள் அனைவரும் ஆம் கடவுள் ஓன்றே என்று ஒரே குரலில் விடையளிப்பார்கள். உண்மையில் இதுவே அவர்களின் வேதங்களில் எழுதிவைக்கப்பட்ட விடயமாகும். என்றாலும் அவர்கள் அனைவரும் வேதம் கூறும் கடவுட் கொள்கைக்கு முரண்பட்டு இருப்பதுடன் இதில் அவர்கள் தங்களுக்கு மத்தியில் கடுமையாக மோதிக்கொள்கின்றனர். மேலும் இறைவன் பூமிக்கு எந்த வடிவத்தில் அல்லது தோற்றித்தில் வருகிறான் என்ற ஒரு அடிப்படை புள்ளியில் அவர்கள் தங்களுக்கு மத்தியில் முரண்பட்டு நிற்கின்றனர். உதாரணமாக, இந்திய கிறிஸ்தவர் கடவுள் குறித்து இவ்வாறு கூறுவார்: கடவுள் ஒருவனே, ஆனால் அவர் மூன்று நபர்களில் (பிதா,மகன் மற்றும் பரிசுத்த ஆவியானவர்) பிரதிபலிக்கிறார் எனத் திரித்துவக் கொள்கையை குறிப்பிடுவார். இந்து மதத்தவராயின் அவர் கடவுளானவர் விலங்கு, அல்லது மனிதன் அல்லது சிலை வடிவத்தில் வருகிறார் எனக் கூறுவார். இந்து மதத்தில் : (சாந்தோக்கிய உபநிடதம் 6:1-2) 'கடவுள் ஒருவன் மட்டுமே இரண்டாவது ஒருவன் கிடையாது'( வேதம் : சுவேதா சுவேத்தரா உபநிடதத்தில் (4: 19 ,4:20, 9:6) ' கடவுளுக்கு பெற்றோரோ தலைவரோ கிடையாது' 'அவனை காணவும் முடியாது. மேலும் கண்ணால் அவனை பார்க்கவும் முடியாது'அவனுக்கு ஒப்பாக எவரும் கிடையாது (யஜுர் வேதம் 9:40) 'ஐம்பூதங்களை (காற்று,நீர்,நெருப்பு போன்றவை) வணங்குவர்கள் இருளில் நுழைந்து இருளில் மூழ்கிப்போனோராவர். இவர்கள் மனிதனால் படைக்கப்பட்டவற்றையே (சிலை மற்றும் கற்கள் போன்ற கையினால் செய்யப்பட்டவற்றை) வணங்குகின்றனர். கிறிஸ்தவத்தில் : (மத்தேயு 4:10) 'அப்பொழுது இயேசு அவனை நோக்கி: போ, சாத்தானே, ஏனென்றால், உன் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள், அவனை மட்டுமே சேவிப்பாயாக என்று எழுதப்பட்டுள்ளது' (யாத்திராகமம் 20:3) -5).என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம் நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராய் இருக்கிறேன். 'என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உங்களுக்கு இருக்க வேண்டாம், நீங்கள் செதுக்கப்பட்ட ஒரு உருவத்தையோ, மேலே வானத்தில் உள்ளதையோ, கீழே பூமியில் உள்ளதையோ, பூமிக்குக் கீழே உள்ள தண்ணீரில் உள்ளதையோ நீங்கள் உருவாக்க வேண்டாம். அவர்களுக்கு பணிவிடை செய்யாதீர்கள், ஏனென்றால் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் ரோஷமிக்கவர் என்னைப் பகைக்கும் தந்தையர்களின் பாவங்களை மூன்றாம் நானகாம் தலைமுறையிலும் விசாரிக்கிறோன்.... More

இஸ்லாமிய மார்க்கம் அழைப்பு, பரஸ்பர விட்டுக்கொடுப்பு (சகிப்புத்தன்மை) அழகிய முறையில் தர்க்கம் செய்தல் பேன்ற விடயங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது.... More

அறிவொளி பற்றிய இஸ்லாமிய கருத்தானது, இறை விசுவாசம் மற்றும் அறிவின் உறுதியான அடித்தளத்தில் அமையப்பெற்றுள்ளது. அதாவது முதலில் அல்லாஹ் பற்றிய (கடவுள்) நம்பிக்கை மற்றும் அந் நம்பிக்கையிலிருந்து பிரிக்க முடியாத அறிவு ஆகியவற்றின் மூலம் அறிவொளியையும் இதய ஒளியையும் ஒருங்கே பெற்றுள்ளது.... More

இயற்கைத் தேர்வுக்கோட்பாட்டை (ஒரு பகுத்தறிவற்ற இயற்பியல் செயல்முறை) என்றும் ஒரு தனித்துவமான புத்தாக்கப் படைப்பு சக்தியாகக் கருதும் சில டார்வினிஸ்டுகள், எந்தவொரு உண்மையான அனுபவ அடிப்படையும் இல்லாமல் அனைத்து கடினமான பரிணாமச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு தனித்துவம் நிறைந்த புத்தாக்க சக்தியாக கருதுகின்றனர். இதனடிப்டையில் பாக்டீரியா உயிரணுக்களின் கட்டமைப்பு மற்றும் தொழிற்பாட்டில் உள்ள வடிவமைப்பின் சிக்கலான தன்மையை அவர்கள் பின்னர் கண்டுபிடித்தனர். அவர்கள் 'ஸ்மார்ட்' பாக்டீரியா, 'நுண்ணுயிர் நுண்ணறிவு', 'முடிவுகாணுதல்-(முடிவெடுத்தல்)' மற்றும் 'சிக்கல் தீர்க்கும் பாக்டீரியா' போன்ற சொற்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால், பாக்டீரியா அவர்களின் புதிய கடவுளாக மாறியது. (theism a giant leap of faith Dr. Raida Jarrar).... More

இஸ்லாம் இந்தக் கருத்தை முழுமையாக மறுக்கின்றது, மனிதனை கண்ணியப்படுத்தி இந்தப்பூமியின் இறை பிரதிநிதியாக அவனை ஆக்குவதில் அகிலத்தாரின் இரட்சகன் அல்லாஹ்வின் உயரிய நோக்கை நிறைவேற்றுவதற்காக ஆதாமை ஏனைய எல்லாப் படைப்பினங்களிருந்தும் தனித்துவமாகப் படைத்து வேறுபடுத்தினான் என அல்குர்ஆன் தெளிவு படுத்துகிறது.... More

பொதுவான தோற்றம் -அடிப்படை- குறித்த பரிணாமாவியல் கருத்திற்கான திருப்தியான ஆதாரங்களை அறிவியல் முன்வைக்கிறது. அதனையே அல்குர்ஆனும் குறிப்பிடுகிறது.... More

அல்குர்ஆன் முதல் மனிதர் ஆதத்தின் சம்பவத்தை குறிப்பிடுவதனூடாக மனித பரிணாமக் கோட்பாட்டின் கருத்தியலை பின் வரும் விடயங்களின் ஊடாக சரிசெய்தது :... More

மக்களிடையே பல்வேறு கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகள் இருப்பது மிகச்சரியான உண்மை ஒன்று இல்லை என்பதற்கு அர்த்தமல்ல. உதாரணத்திற்கு, கருப்பு கார் வைத்திருக்கும் ஒருவர் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனம் குறித்து பலரின் கருத்துக்கள் மற்றும் யூகங்களும் வித்தியாசமானதாக இருந்தாலும், அவர் கருப்பு கார் வைத்திருக்கிறார் என்ற உண்மையை மறுப்பதிற்கில்லை. அத்துடன் முழு உலகமும் அந்த நபரின் கார் சிவப்பு நிறமானது என நம்பினாலும், அந்த நம்பிக்கை அதை சிவப்பு நிறமாக்காது என்பதே யதார்த்தமான விடயம். ஆகவே இங்கே அவரிடம் ஒரு கருப்பு கார் உள்ளது என்ற ஒரு யதார்தத்தை அனைவரும் ஏற்றாக வேண்டும்.... More

மனிதனின் இச்சைக்கேட்ப பாலியல் பலாத்காரம் தீயதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது நியாயமற்றது. மாறாக, பலாத்காரத்தில் மனித உரிமை மீறல் உள்ளது என்பதும், அவனது மதிப்பு மற்றும் சுதந்திரம் மீறப்படுவதும் தெளிவாகிறது. இதுவே கற்பழிப்பு தீமை என்பதற்கான ஆதாரமாகும். அதே போல் ஓரினச்சேர்க்கை. இது பிரபஞ்ச விதிமுறைகளை மீறும் செயற்பாடு மாத்திரமன்றி; முறையான திருமணத்திற்கு அப்பாட்பட்ட தொடர்புமாகும். முழு உலகமும் இது செல்லுபடியற்றது என முடிவு செய்தாலும் இதுவே சரியான முறையாகும். அதாவது முறையான ஆண் பெண் திருமணமே சரியான ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். மனித குலம் அனைவரும் ஓரினச்சேர்கையானது சரி என்பதை ஏற்றுக்கொண்டாலும் அது பட்டவர்த்தனமான தவறாகும் என்பதை ஏற்றாக வேண்டும்.... More

அதிகமானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட "முழுமையான உண்மை இல்லை" என்ற கூற்றானது உண்மையில் எது சரி எது தவறு என்பது பற்றிய நம்பிக்கையாகும். அவர்கள் அதை மற்றவர்கள் மீது திணிக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் அவர்கள் நடத்தைக்கான அளவுகோளொன்றை கட்டமைத்து அனைவரும் அதைக் கடைப்பிடித்தொழுக வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் அவர்கள் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்று நம்பிய விடயத்தை மீறுவதுடன் இது ஒரு சுய-முரண்பாடான நிலையாக கொள்ளப்படுகிறது.... More

இதனை பின்வருமாறு விளக்க முடியும். அதாவது இப்புவிப் பந்தில் வாழும் மனிதர்கள் ஆகாயத்தில் பறப்பவர்களை ஒத்தவர்கள். உதாரணத்திற்கு பல்வேறு கலாச்சாரப் பின்புலங்களைக் கொண்டோர் ஒரு விமானத்தில் ஏறுகிறார்கள் எனக் கொள்வோம், அந்த விமானம் அவர்களை எங்கு கொண்டு செல்கிறது, அதனை ஓட்டிச்செல்பவர் யார் என்பதோ அவர்களுக்குத் தெரியாது, அது மத்திமரமின்றி எல்லா காரியங்களையும் தாங்களே சுயமாக செய்து கொள்ளவேண்டும், விமானத்தின் உள்ளே ஏற்படும் அசௌகரியங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நிர்பந்திக்கப்படுகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.... More

அவ்வாறு அமையாது. உதாரணத்திற்கு ஒரு முஸ்லீம் திரித்துவக் கோட்பாட்டில் நம்பிக்கை கொள்ளாததால்; அவர் இறைராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார் என்ற அடிப்படையில் அவரை ஒரு காஃபிர் -கிறிஸ்துவத்தை ஏற்காதவர்- என்று கிறிஸ்தவர் கருதுகிறார்களே! இதே போன்றுதான் இஸ்லாத்தை வாழ்க்கைநெறியாக ஏற்காதவர் யாராயினும் அவர்களுக்கு அரபு மொழியில் காபிர் என்ற வார்தை பயன்படுத்தப்படுகிறது. 'குப்ர்' என்ற வார்த்தைக்கு உண்மையை அல்லது சத்தியத்தை மறுப்பது என்று பொருள், முஸ்லீம்களுக்கு உண்மை, சத்தியம் என்பது ஏகத்துவமாகும். கிறிஸ்தவர்களைப் பொருத்தவரை அவர்களது மதத்தின் அடிப்படையில் சத்தியம் என்பது திரித்துவமாகும்.... More

அல்குர்ஆன் என்பது அகிலத்தின் இரட்சகனிடமிருந்து அனுப்பட்ட வேதங்களில் இறுதி வேதமாகும். முஸ்லிம்களைப் பொருத்தவரை அல்குர்ஆனுக்கு முன் அனுப்பப்பட்ட அனைத்து வேதங்களையும் அதாவது இப்ராஹீம் அலை அவர்களின் ஸுஹுபுகள் உட்பட ஸபூர் தவ்ராத் இன்ஜீல் அவை அல்லாத இறைவேதங்களை நம்புகின்றனர். அத்துடன் எல்லா இறைவேதங்களும் தூய ஏகத்துவத்தை அதாவது "அல்லாஹ்வை இறைவனாக நம்பி வணக்கத்தை அவனுக்கு மாத்திரமே செலுத்தல்" என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட உண்மை செய்தியை –தூதுத்துவத்தை உள்ளடக்கியதாக இருந்தது என்பதை உறுதியாக ஏற்றுக்கொள்கின்றனர். இருப்பினும் அல்குர்ஆன் முந்தைய இறைவேதங்களைப் போன்று, குறிப்பிட்ட குழு அல்லது பிரிவினருக்கு மாத்திரம் ஏகபோக உரிமை கொண்டதாக இல்லை. அதே போன்று பல்வேறு வித்தியாசமான பிரதிகளும் கிடையாது. அது எந்த மாற்றத்திற்கும் உட்படவுமில்லை, மாறாக அது அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரே பிரதியாக மாத்திரமே காணப்படுகிறது. அல்குர்ஆன் வாசகம் எந்த மாற்றமோ அல்லது திரிபோ இன்றி அதன் அஸல் (அடிப்படை) மொழியான அறபு மொழியிலேயே காணப்படுகிறது. அது இன்று வரையிலும் பாதுகாக்கப் பட்டதாகவே தொடர்ந்தும் உள்ளது, எதிர்காலத்திலும் அகிலத்தாரின் இரட்சகனான அல்லாஹ் வாக்களித்தது போன்று இப்பூவுலகம் அழிக்கப்படும் வரையில் அது நிலைத்திருக்கும். அல்குர்ஆன் அனைத்து முஸ்லிம்களினதும் கைகளில் பரிமாறப்படும் ஒரு நூலாக இருப்பதுடன், அதிகமானோரின் உள்ளங்களில் பதியவைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளிலும் அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் மக்களின் புலக்கத்தில் பரவாலாக உள்ளன. அவைகள் யாவும் அல்குர்ஆனின் கருத்துக்களை பிரதிபலிக்கும் மொழிபெயர்ப்பு மாத்திரமே என்பதை கருத்திற் கொள்ளவும். அன்றைய அரேபியர்கள் சொற்பொழிவு, சொல்லாட்சி, கவிதை போன்றவற்றில் தலைசிறந்தவர்களாக இருந்த போதிலும், குர்ஆன் போன்ற ஒன்றைத் கொண்டுவருமாறு அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ் அரேபியர்களுக்கும் அரேபியர் அல்லாதவர்களுக்கும் சவால் விடுத்தான். இருப்பினும், இந்த குர்ஆன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமிருந்தும் வர முடியாது என்பதை அவர்கள் உறுதியாக ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் இந்த சவால் பதினான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்தும், எவரும் இச்சவாலை எதிர்கொள்ள முடியவில்லை. இதுவொன்றே இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து கிடைத்த வேதம் என்பதற்கு மிகப் பெரிய சான்றுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.... More

அவ்வாறு தவ்ராத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டு யூதர்களிடமிருந்து இந்த அல்குர்ஆன் வந்திருந்தால் மனிதர்களில் அதனை தங்களுக்குரியது என்பதாக உரிமை பாராட்டுவதில் அவர்கள் முந்திக்கொண்டிருப்பர். வேத இறைவெளிப்பாடு (வஹி) இறங்கிய காலத்தில் இவ்வாறான வாதமொன்றை அவர்கள் முன்வைத்தனரா என்று நாம் கேள்வியெழுப்பினால் அதற்கு இல்லையென்பதே பதிலாகும்.... More

புராதன –பண்டைய நாகரிங்களில் சரியான சில விடயங்கள் காணப்பட்டன. அதில் மிகவும் அதிகமானவை கட்டுக்கதைகளும், புனைவுகளுமே. வரண்ட பாலை நிலத்தில் வளர்ந்த எழுதப்படிக்கத் தெரியாத ஒரு தீர்கதரிசிக்கு இவ்வாறான நாகரிங்களில் உள்ள (சிறப்பான) சரியான விடயங்களை மாத்திரம் (நகல் செய்து) பிரதி செய்துவிட்டு கட்டுக்கதைகளையும் புராணங்களையும் விட்டு விடுவதற்கு எவ்வாறு முடிந்தது? என்பது சிந்திக்கத் தக்க விடயமல்லவா!?.... More

உலகத்தில் பல்லாயிரக்கணக்கான மொழிகளும், வழக்கு மொழிகளும் பரவலாக காணப்படும் ஒரு விடயாமாகும். இவ்வாறாக காணப்படும் எந்த மொழியில் அல்குர்ஆன் இறக்கப் பட்டாலும் ஏன் மற்றைய மொழியொன்றில் இறக்கப்பட்டிருக்கக் கூடாது, அல்லது இறங்கியிருக்க வேண்டுமே என்ற கேள்வியை சாதாரணமாக மக்கள் கேட்கவே செய்வர். உண்மையில் அல்லாஹ் தனது தூதர்களாக அவர்களின் சமூகத்தாரின் மொழியை பேசக்கூடியவரையே அனுப்பி வைத்தான் இந்த அடிப்படையில் இறுதித்தூதராக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸலம் அவர்களை தேர்வு செய்தான். எனவே நபியவர்களினதும் அவர்களின் சமூகத்தின் மொழியும் அறபாக இருந்தது ஆகையால் அவர்களின் மொழியான அறபு மொழியில் அல்குர்ஆனை அல்லாஹ் இறக்கினான். அதனை மறுமை நாள் வரையில் எந்த திரிபுமின்றி பாதுகப்பான். இதே போல் அல்லாஹ் ஈஸா அலை அவர்களின் வேதநூலின் மொழியாக அராமிக் மொழியை தெரிவு செய்தான்.... More

அந்நாஸிஹ் வல்மன்ஸுஹ் கோட்பாடானது இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களில்- தீர்ப்புகளில் ஏற்பட்ட ஒரு வளர்ச்சியாகும். இக்கோட்பாடானது முன்னைய ஒரு சட்டத்தீர்ப்பின் செயற்பாட்டை நிறுத்துவது, அல்லது குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக வந்த புதிய சட்டத்தை அனுமதித்தல் அல்லது பொதுவாக குறிப்பிடப்பட்ட ஒரு விடயத்தை வரையறுத்தல் அல்லது குறிப்பாக வந்துள்ள ஒரு தீர்ப்பை பொதுமைப்படுத்தல் போன்ற விடயங்களை முன்வைக்கும். இது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவரகள் முதல் முன்னைய சட்டங்களில் காணப்பட்ட எல்லோராலும் அறியப்பட்ட ஒரு விவகராமாகும். இதற்கு உதாரணமாக பின்வரும் விடயங்களை குறிப்பிட முடியும். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் நலனை கருத்திற்கு கொண்டு ஒரு சகோதரர் தனது சொந்த சகோதரியை திருமணம் முடித்துக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் ஏனைய காலங்களில் வந்த இறை சட்டதிட்டங்களில் இது தீமையாக கருதப்பட்டு மாற்றப்பட்டது. அதே போன்று சனிக்கிழமை அன்று உழைத்தல் என்பது நலன் என்ற அடிப்படையில் இப்ராஹீம் அலை அவர்களினது ஷரீஆவிலும் முன்பிருந்த நபிமார்கள் மற்றும் ஏனைய எல்லா இறைசட்டங்களிலும் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியமாக இருந்து வந்தது. அந்த நலவானாது மூஸாஅலை அவர்களின் சட்டத்தில் தீங்காக மாறியது. அதாவது அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே போன்று அல்லாஹ் இஸ்ரவேலர்கள் காளை மாட்டின் கன்றை வணங்கியமைக்குப் பின் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களையே மாய்த்துக்கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். இந்த சட்டம் அதன் பின்னர் நீக்கப்பட்டது. இவையல்லாத இது போன்ற உதாரணங்கள் அதிகம் காணப்படுகின்றன. ஆக ஒரே மார்க்கச்சட்டத்தில் ஒரு சட்டத்தீர்ப்பு இன்னொரு சட்டத்தீர்ப்பின் மூலம் மாற்றப்பட்டுள்ளது என்பதையும் அல்லது இரு தனித்தனியான மார்க்கச்சட்டங்களுக்கு இடையில் மார்க்கத் தீர்ப்புகளில் வித்தியாசம் இடம்பெற்றுள்ளது என்பதை மேற்குறிப்பிட்ட உதாரணங்களிலிருந்து விளங்கிக்கொள்கிறோம்.... More

உண்மையில் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளல் அவசியம். அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது தோழர்கள் ஓதுவதற்காகவும் பிறருக்கு கற்றுக் கொடுப்பதற்காகவும் அல்குர்ஆனை பதிவு செய்யப்பட்ட ஒரு ஆவணமாகவே விட்டுச்சென்றார்கள். அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும் பல ஏடுகளில் தொகுக்கப்பட்டதை பார்ப்பதற்கு இலகுபடுத்தல் என்ற நோக்கில் ஒரே இடத்தில் சேகரிக்குமாறு பணித்தார்கள். உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் நகரங்களில் வசித்து வந்த ஸஹாபாக்களிடம், பல்வேறு அரேபிய வழக்குமொழிகளில் காணப்பட்ட ஏடுகளையும் பிரதிகளையும் ஏரித்து விடுமாறு பணிப்புரை விடுத்து, நபியவர்கள் விட்டுச்சென்ற மூலப்பிரதியான அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களால் ஒன்று திரட்டப்பட்டு வைக்கப்பட்ட அல்குர்ஆனின் புதிய பிரதிகளை அவர்களுக்கு அனுப்பிவைத்தார். இதன் மூலம் நபியவர்கள் விட்டுச்சென்ற ஒரே மூலப் பிரதியை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் அனைத்து நகரங்களிலும் மக்கள் பயன்படுத்துவதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்திக்கொடுத்தார்.... More

இஸ்லாம் ஒரு போதும் பிரயோக விஞ்ஞானத்துடன் முரண்படுவதில்லை. மாறாக அல்லாஹ்வை இறைவனை ஏற்றுக்கொள்ளாத மேற்குலக விஞ்ஞானிகளில் பலர் தங்களது அறிவியல் ஆய்வின் மூலமாக படைப்பாளனின் இருப்பு இன்றியமையாத ஒன்று என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இவ்வறிவியல் ஆய்வே அவர்களை இந்த யதார்த்தத்தின் பால் அழைத்துச்சென்றுள்ளது. இஸ்லாம் பகுத்தறிவு மற்றும் சாதாரண சிந்தனை சார் தர்க்கவியலை மிகைத்து பிரபஞ்சத்தைப் பற்றி சிந்திக்கவும் கூர்ந்து அவதானிக்கவும் அது தூண்டுகிறது.... More

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அப்துல்லாஹ்வின் மகனாவார். அப்துல்லாஹ் அப்துல் முத்தலிபின் மகனாவார், அப்துல் முத்தலிப் ஹாஷிமின் மகனாவார். மக்காவில் வசித்துக்கொண்டிருந்த அறபிக்கோத்திரமான குறைஷிக்குலத்தை சார்ந்தவர் இவர். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான இஸ்மாஈல் அவர்களின் வழித்தோன்றலுமாவார்.... More

நவீன தொழில்நுட்பமானது மனித குரல்களையும், படங்களையும் ஒரு நொடியில் கடத்தி இன்னொருவருக்கு சென்றடையச் செய்கிறது.1400 ஆண்டுகளுக்கு முன்பு மனிதகுலத்தை உருவாக்கிய இறைவன் தனது நபியை, உடல் மற்றும் ஆன்மாவுடன் வானத்திற்கு உயர்த்தியிருக்க முடியாதா? புராக் என்ற பெயரால் அழைக்கப்படும் ஒரு வாகனத்தின் மீது ஏறிச்சென்றார்கள். புராக் என்பது ஒரு வெள்ளை நிறமான பிராணி கழுதையை விட சற்று உயரமான கோவேரிக் கழுதையை விட உயரம் குறைந்த ஒரு வாகனமாகும்.(பிராணியாகும்;) அந்தப் பிராணி தன் பார்வை எட்டிய தூரம் வரை தனது கால்களை எடுத்து வைக்கும் அந்த அளவுக்கு வேகமாக பிரயாணம் செய்யும்! அதற்கு கடிவாளமும் விளக்கும் உண்டு அதில் நபிமார்கள் பிரயாணம் செய்துள்ளனர்.... More

ஆயிஷா அம்மையார் நபியவர்களை மிகவும் விரும்பினார்கள் என்றும் அவர்கள் இந்த திருமணத்தினால் எந்தப் பிரச்சினையும் கொள்ளவில்லை என்பது குறித்து பேசும் ஹதீஸ்களை ஹதீஸ் கிரந்தங்களில் மிகவும் தரம் வாய்ந்த ஹதீஸ்களை கொண்ட ஸஹீஹ் அல் புஹாரி கிரந்தத்தில் எம்மால் கண்டு கொள்ள முடிகிறது.... More

யூத சமூகத்தினரான பனு குரைழா, உடன்படிக்கையை மீறி, இணைவைப்பாளர்களுடன் இணைந்து முஸ்லிம்களை அழிப்பதற்கு கூட்டுச்சேர்ந்தார்கள். இந்த தூரோகச் செயல் அவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிட்டது. எனவே அவர்களின் ஷரீஆவின் -மத சட்டதிட்டத்தின்-அடிப்படையில் துரோகம் மற்றும் உடன்படிக்கை மீறலுக்கான தண்டணை அமுல்படுத்தப்பட்டது. இதனை நபியவர்கள் அவர்களின் உடன்பாட்டின் அடிப்படையில் நிறைவேற்றினார்கள். அதாவது அவர்களிடமே இந்த விவகாரம் குறித்து தீர்ப்பு வழங்குவதற்கு ஒருவரை நியமிக்குமாறு வேண்டிக் கொண்டதற்கிணங்க அவர்கள் நபித்தோழர் ஒருவரை நியமித்தார்கள். அவர் இந்த விவகாரத்தில் அவர்களின் மதச்சட்டம் குறிப்பிடும் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வேண்டிக் கொண்டார். அதனடிப்படையிலேதான் இத்தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட்டது. (தாரீகுல் இஸ்லாம் : (2:307-318)). تقدم... More

முதலாம் வசனம்: "இம்மார்க்கத்(தைத் தழுவுவ)தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது''. (அல் பகரா :256). - இந்த வசனமானது மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள செய்வதில் நிர்ப்பந்தத்தை (வற்புருத்தலை) பிரயோகித்தலை தடை செய்தல் எனும் மார்க்கத்தின் மிகப்பெரும் இஸ்லாமிய அடிப்படையொன்றை நிறுவுகிறது. அதே வேளை இரண்டாவது வசனமானது : ''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பவர்களோடு போராடுங்குள்'' என்று குறிப்பிடுகிறது. (அத்தவ்பா : 29). குறிப்பு: 'இந்த வசனத்தை முழுமையாக படிப்பதன் மூலம் இந்த வசனம் குறிப்பிட வந்த விடயத்தை புரிந்து கொள்ளலாம்' இந்த வசனம் குறிப்பிடும் கருத்து பிரத்தியேகமானதே தவிர பொதுவானதல்ல. அதாவது இஸ்லாத்தை எதிர்த்து, இஸ்லாமிய பிரச்சாரத்தை பிறர் ஏற்றுக்கொள்வதை தடுப்பவர்களுடன் சம்பந்தப்பட்டது. ஆகவே இந்த வகையில் இரண்டு வசனங்களுக்குமிடையில் உண்மையில் எவ்வித முரண்பாடுமில்லை. تقدم تقدم... More

ஈமான் (இறைவிசுவாசம்) என்பது அடியானுக்கும் அவனின் இரட்சகனுக்குமிடையிலான தொடர்பாகும். எப்போது இத்தொடர்பை ஒருவர் முறித்துக்கொள்ள விரும்புகிறாரோ அவரின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது. ஆனால் யார் இதனை பகிரங்கப் படுத்தி இஸ்லாத்தை எதிர்ப்பதற்கும் அதன் தோற்றத்தை சிதைத்து கொச்சைப்படுத்தவும் (மத நிந்தனை செயற்பாட்டில்) அதற்கு துரோகம் இழைப்பதற்கும் நாடுகிறாரோ மனிதனால் இயற்றப்பட்ட சாதாரண போர்விதிகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் அவன் கொல்லப்படவேண்டும் என்பதே தீர்ப்பாகும். இதில் யாரும் மாற்றுக்கருத்துக் கொள்ளமாட்டர்கள் என்பதே அடிப்படையாகும்.... More

மூஸா மற்றும் தாவூத் அலைஹிமஸ்ஸலாம் இருவரும் போராளிகளாக இருந்தனர். மூஸாவும் முஹம்மதும் (அலைஹிமஸ்ஸலாம்) அரசியல் மற்றும் உலக விவகாரங்களில் பல பதவிகளை பொறுப்பேற்றிருந்தனர். இருவரும் சிலைவணக்கம் நிறைந்த சமூகத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு புலம் பெயர்ந்து சென்றனர். மூஸா நபி தனது சமூகத்தாருடன் எகிப்தைவிட்டு வெளியேறினார். தனது சொந்த தேசத்தின் அரசியல் மற்றும் இராணுவ ஆதிக்கத்தலிருந்து விடுபட்டு தனது மார்க்கத்தை பாதுகாக்க முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யத்ரிபுக்கு -மதீனாவுக்குச்- சென்றார்கள். அதற்கு முன் தனது தோழர்கள் அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்திருந்தனர். மூஸா மற்றும் முஹம்மத் ஆகியோரின் பிரச்சாரங்கள் எகிப்திலும் அரபு நாட்டிலும் காணப்பட்டன. அவ்விரண்டு சூழல்களும் விக்கிரக வழிபாட்டு சார்ந்த சூழலாகும். ஆனால் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரச்சாரம் சிலை வணங்கிகள் அல்லாத யூத சமூகத்திற்கானதாக இருந்தது. இதுவே ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரச்சாரம் சற்று வித்தியசப்படக் காரணம். அத்துடன் அவர் இருந்த சூழ்நிலையும் மிகக் கடினமானதாகக் காணப்பட்டது. மூஸா மற்றும் முஹம்மத் அலைஹிமஸ்ஸலாம் ஆகியோரின் பிரச்சாரப் பொறுப்பானது சிலை வணக்கத்திலிருந்து ஏகத்துவத்தின் பால் மாற்றுகின்ற மிகப்பாரியதும் அடிப்படையுமான ஒன்றாகக் காணப்பட்டது.... More

ஜிஹாத் என்பது பாவங்களை தவிர்ப்பதில் ஆன்மாவுடன் போராடுதலைக் குறிக்கும் மேலும் ஒரு தாய் தனது பிள்ளையை சுமக்கும் வேளை வலிகளை தாங்கிக் கொள்வது தாயின் ஜிஹாதாகும் ஒரு மாணவன் தனது கற்றலின் போது அயராது உழைப்பதும் ஜிஹாதாகும் தனது செல்வம் மானம் மார்க்கத்தை பாதுகாப்பதற்காக போராடுவதும் ஜிஹாதாகும். இவைகள் மாத்திரமின்றி தொழுகை நோன்பு போன்ற ஈபாதத்துகளில் -வணக்க வழிபாடுகளில்- அதற்குரிய நேரத்தில் தன்னை அயராது ஈடுபடுத்திக்கொள்வது ஜிஹாதின் வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.... More

உயிரை கொடையாய் அளித்தவன், உயிரைப்பெற்றவனிடம் அதனை அழித்துக்கொள்ளவும் எந்தக்குற்றமுமின்றி உள்ள அப்பாவிகளின் உயிர்களை துவம்சம் செய்யவும் உத்தரவு பிரப்பிப்பது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். உயிரை கொடையாய் அளித்த வல்லோன் இவ்வாறு கூறுகிறான்: ''உங்களின் உயிர்களை நீங்களே மாய்த்துக்கொள்ள வேண்டாம்''. (அந்நிஸா:29). - இவ்வசனமும் இதுபோன்ற அதிகமான வசனங்களும் மதத்திற்கோ அதன் நோக்கங்களுக்கோ தொடர்பில்லாத குழுக்களின் நலனுக்காக, புனிதங்களை மீறாமல், ஒருவரின் உயிரைப் பணயம் வைக்காமல் அல்லது அழிவுக்கு உட்படுத்திக் கொள்ளாமல், பழிவாங்குதல் அல்லது அத்துமீறலைத் தடுத்தல் போன்ற நியாயமான காரணங்களுக்காக அன்றி ஒரு உயிரைக் கொல்வதை தடைசெய்கிறது. இதுவே இந்த மகத்தான மார்க்கத்தின் உயரிய நெறிமுறையாகும். ஹுருல்ஈன் பெண்களை அடைந்துகௌ்ளல் எனும் குறுகிய நோக்கத்திற்காக மாத்திரம் சுவர்க்கம் நிறுவப்பட வில்லை. சுவர்க்க இன்பம் என்பது கண்கள் காணாத, காதுகள் கேட்டிராத, எந்த மனிதனின் உள்ளத்திலும் உதித்திராத பேரின்பமாகும். تقدم... More

முதலாவது வாள் என்ற வார்த்தை அல்குர்ஆனில் ஒரு தடவையேனும் குறிப்பிடப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய வரலாற்றில் போரே நிகழாத நாடுகளில்தான் உலக முஸ்லிம்களின் பெருந்தொகையினர் வசித்து வருகின்றனர். இதற்கு இன்துநேஷியா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் சிறந்த உதாரணமாகும். முஸ்லிம்கள் வெற்றிகொண்ட தேசங்களில் இன்றுவரையில் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் ஏனையோரும் வாழ்ந்து வருவது, இஸ்லாம் வாளால் பரப்பபடவில்லை என்பதற்கான சான்றாகும். அதே வேளை முஸ்லிம் அல்லாதோரால் காலணித்துவத்திற்கு உட்பட்ட நாடுகளில் முஸ்லிம்கள் சிறு தொகையினரே உள்ளனர். கூட்டுப் படுகொலையும், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் தமது மதத்தை ஏற்குமாறு பலவந்தப் படுத்தியமையும் இதற்குக் காரணமாகும். சிலுவைப்போர் இதற்கு சிறந்த உதாரணமாக காணப்படுகிறது.... More

ஒரு முஸ்லிம் சான்றோரினதும், இறைதூதரின் தோழர் வழியையும் பின்பற்றி நடப்பதுடன், இவ்வாறான புனிதர்களை நேசித்து, இவர்களைப் போன்று நல்லவராக இருக்க வேண்டு என முயற்சி செய்து அவர்கள் நடந்து கொண்டது போல் அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டும். ஆனால் அவர்களை கடவுளின் நிலைமையில் வைத்து புனிதப்படுத்துவதோ, அல்லாஹ்வுக்கும் அவருக்கும் இடையில் ஒரு இடைத்த தரகராக வைத்துக் கொள்வதோ கூடாது.... More

முஹம்மத் நபி அவர்கள் ஸுன்னியாகவோ ஷீஆவாகவோ இருக்கவில்லை. மாறாக சத்தியமார்க்கத்தைப் பின்பற்றி நடக்கும் ஒரு உண்மை முஸ்லிமாகவே இருந்தார். ஈஸா அவர்கள் ஒரு கத்தோலிக்கராகவே, அல்லது வேறு எந்தவொன்றின் அங்கத்தவராவோ இருக்கவில்லை. இவர்கள் இருவரும் எந்த தரகரும் இல்லாது இறைவனை (அல்லாஹ்வை) மாத்திரம் வணங்கும் உண்மை முஸ்லிம்களாகவே இருந்தனர். ஈஸா (அலை) அவர்கள் தன்னையோ தனது தாயையோ வணங்குபவராக இருக்கவில்லை. அதே போன்று முஹம்மத் நபியும் தன்னையோ தனது பெண்பிள்ளையையோ, அல்லது தனது மகளின் கணவரையோ வணங்குபவராக இருக்கவில்லை.... More

இமாம் என்ற வார்த்தையின் அர்த்தம், மக்களுக்கு தொழுகை வழிபாட்டை முன்னின்று நடத்துபர் அல்லது அவர்களின் விவகாரங்களில் தலைமை தாங்கி வழி நடத்துபவரையும் குறிக்கும் ஒரு சொல்லாகும். இது குறிப்பிட்ட நபர்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட, அல்லது மட்டுப்படுத்தப்பட்ட மத அந்தஸ்த்து -தகுதி- கிடையாது. மார்க்கம் அனைவருக்குமானது என்ற வகையில் இஸ்லாத்தில் வர்க்கமோ அல்லது புரோகிதமோ (சமயகுருப்பதவியோ) இல்லை. குறிப்பு : பொதுவாக இது பள்ளிவாசலில் வழிபாடு நேரத்தில் வழிபாட்டை தலைமை ஏற்று நடத்துபவரையும் நாட்டுத் தலைமையையும் குறிக்கும் ஒரு சொல்லாகும். மேலும் இமாம் என்பவர் தொழுகையை நடத்துபவர் மட்டுமல்லாமல் மதத் தலைவராகவும், மதம் தொடர்பான விடயங்களை ஆளமாக கற்று மக்களுக்கு அவற்றை கற்றுக்கொடுப்பவராகவும் இருப்பார். இஸ்லாத்தில் மனிதர்கள் யாவரும் அல்லாஹ்வின் முன் சீப்பின் பற்களைப்போல் சமமானவர்கள். ஆகையால் இறையச்சம் நற்செயல் ஆகியவைகளின் மூலமேயன்றி, அரபி,அரபி அல்லாதவர் என்ற வேறுபாடுகிடையாது. மக்களுக்கு தொழுகை நடாத்துவதற்கு மிகவும் தகுதியானவர் அல்குர்ஆனில் பெரும் பகுதியை மனனம் செய்தவரும், தொழுகை வழிபாட்டுடன் தொடர்பான சட்டதிட்டங்களில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவற்றை கற்றறிந்தவருமாவார். முஸ்லிம்களிடத்தில் ஒரு இமாம் எவ்வளவு மதிப்புக்குரியவராக இருந்தாலும் பாதிரியாரைப் போன்று அவரால் பாவ ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்கவோ பாவங்களை மன்னிக்கவோ முடியாது.... More

நபி என்பவர் இறைவெளிப்பாட்டை (வஹியை) பெற்றவர், புதிய ஒரு தூதுத்துவத்தையோ அல்லது வழிமுறையையோ கொண்டுவரவில்லை அர்ரசூல் என்ற இறைத்தூதர் தமது சமூகத்தாருக்கு பொருத்தமான வழிமுறை மற்றும் சட்டதிட்டங்களுடன் அல்லாஹ்வால் அனுப்பட்டவரைக் குறிக்கும். குறிப்பு: மேற்குறிப்பிட்ட இரு சொற்களும் இறை ஆணையை –தூதை- இவ்வுலகில் மக்களுக்கு எத்திவைப்பதற்காக அனுப்பபட்ட இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மனிதப் பிரதிநிதிகளைக் குறிக்கும். நபி மூஸாவிற்கு தவ்ராதும், நபி ஈஸாவிற்கு இன்ஜீலும், நபி முஹம்மதிற்கு அல்குர்ஆனும், நபி இப்ராஹிமிற்கு ஸுஹுபுகளும், நபி தாவுதிற்கு ஸபூர் வேதமும் இறக்கியருளப்பட்டதை இதற்கு உதாரணமாக் கூறலாம்.... More

மனிதர்களுக்கு பொருத்தமானவர் அவர்களைப்போன்று தங்களுடன் அவரவர் மொழியில் பேசி அவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவராவார். மனித இயல்பிற்கு அப்பாற்பட்ட வானவரை ஒரு தூதராக அவர்களுக்கு அனுப்பி, அவர்களுக்கு சிரமமான காரியங்களை செய்திருந்தால் வானவர் செய்யும் காரியத்தை தங்களால் செய்ய முடியாது என நியாயம் கூறி அவர் கொண்டு வந்த தூதை நிராகரித்து விடுவர்.... More

வஹியின் மூலம் தனது படைப்புகளுடன் அல்லாஹ் தொடர்பு கொள்கிறான் என்பதற்கான சில சான்றுகள் :... More

தடை செய்யப்பட்ட மரத்தின் கணியை சாப்பிட்டதின் காரணமாக மனித குலத் தந்தை ஆதத்தின் தவ்பாவை ஏற்றுக்கொண்டதன் மூலம் மனிதனுக்கு மிகப்பெரும் பாடத்தைக் கற்றுத்தருகிறான். அதுதான் மனித குலத்தின் இரட்சகன் அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய முதல் மன்னிப்பாகும். ஒருவரின் பாவத்தை -குற்றத்தை- இன்னொருவர் சுமக்க மாட்டார் என்ற அடிப்படையில் கிறிஸ்துவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் ஆதமிடமிருந்து அனந்தரமாக பெற்ற பாவம் என்ற நம்பிக்கைக்கு எந்த அர்த்தமும் கிடையாது. ஆகவே ஒவ்வொரு மனிதரும் அவரவர் பாவத்தையே சுமக்கிறார். இது இறைவன் எம்மீது செய்த கருணையாகும். அதாவது மனிதன் எவ்விதக்குற்றமும் பாவமுமின்றி தூய்மையாகவே பிறக்கிறான். அவன் பருவ வயதை அடைந்ததிலிருந்தே அவனின் செயலுக்கு வகைகூறுபவனாக மாறுகிறான்.... More

சிருஷ்டிகர்த்தாவான இறைவன் நித்திய ஜீவன், எல்லாவற்றையும் நிர்வகிப்பவன், எவ்விதத் தேவையுமற்றவன், சக்கியுள்ளவன். இவ்வாறான பண்புகளைப் பெற்றவனுக்கு, கிறிஸ்தவர்கள் நம்பிக் கொண்டிருப்பது போல் மனிதர்களுக்காக இயசுவின் தோற்றத்தில் ஒருவரை பிரதிபலிக்கச் செய்து அவரை சிலுவையில் அறைந்து மரணிக்கச் செய்யவேண்டும் என்ற எந்தத் தேவையும் அவனுக்குக் கிடையாது. அவனே உயிரைக் கொடுக்கிறான், மேலும் அதனை பரிக்கவும் செய்கிறான், இதனால் அவன் ஒரு போதும் மரணிப்பதில்லை. அதே போன்று மீண்டும் உயிர்த்தெழுவதுமில்லை. அவனின் தூரதர்களான இப்ராஹீமை நெருப்புக் குண்டத்திலிருந்தும், மூஸாவை பிர்அவ்ன் மற்றும் அவனின் படைகளிடமிருந்து காப்பாற்றியது போல் அவனின் தூதரான இயேசுவையும் கொலை மற்றும் சிலுவையில் அறையப் படுவதிலிருந்து அவனே காப்பாற்றினான். இவ்வாறே அல்லாஹ் தனது நல்லடியார்களை எப்போதும் பாதுகாத்த வண்ணம் உள்ளான்.... More

ஒரு முஸ்லிம் கணவர் தனது கிறிஸ்தவ அல்லது யூத மனைவியையும் அவளின் வேதத்தையும், அவளின் தூதரையும் மதித்து நடப்பார். இதன் மூலமே அவரின் இறைவிசுவாசம் உறுதிப் படுத்தப்படுகிறது. மேலும் தனது மனைவி மார்க்கக்கிரிகைகளை செய்வதற்கான சுதந்திரத்தையும் வழங்குவார். ஆனால் இதற்கு மாற்றமாக ஒரு முஸ்லிம் பெண் இவ்வாறு நடந்து கொள்வது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டதல்ல. மாறாக எப்போது ஒரு கிறிஸ்தவர் அல்லது யூதர் அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படக்கூடியவன் வேறுயாறும் கிடையாது என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் நம்பி ஏற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நாம் எமது பெண்மக்களை திருமணம் முடித்துக் கொடுப்போம்.... More

உண்மையில் இஸ்லாமிய நாகரீகமானது படைப்பாளனுடனான உறவை மிகச் சிறப்பான முறையில் பேணுவதுடன், படைப்பாளனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையிலான உறவையும்; மிகச்சரியான இடத்தில் வைத்துள்ளது. அதே வேளை ஏனைய மனித நாகரீகங்கள் அல்லாஹ்வை நிராகரித்து, நம்பிக்கை மற்றும் வணக்க வழிபாடுகளில் இறைவனின் படைப்பினங்களை அவனுக்கு நிகராக ஆக்கி, இறைவனின் கண்ணியம் மற்றும் புகழுக்கு எவ்விதத்திலும் பொருந்தாத விதத்தில் அவனுடைய அந்தஸ்தை குறைத்து அவனுடன் உறவு பேணுவதில் தவறாக நடந்து கொண்டுள்ளது.... More

இஸ்லாமிய மார்க்கம் சிறந்த பண்பாடுகளை கடைப்பிடித்து, தீய செயற்பாடுகளை விட்டும் விலகி நடக்குமாறு அழைப்பு விடுக்கிறது. அத்துடன் சில முஸ்லிம்களிடத்தில் காணப்படுகின்ற தவறான நடத்தையானது, அவை அவர்களின் கலாச்சார பழக்கவழக்கங்கள்; அல்லது மார்க்கம் குறித்த அவர்களின் அறியாமை, சரியான மார்க்த்தை விட்டு விலகியிருத்தல் போன்றவைகளால் ஏற்படுகின்றன.... More

மேற்கத்திய அனுபவமானது, மத்திய காலத்தில் தேவாலயமும் அரசும் சேர்ந்து மக்களின் வளங்களை சுரண்டி அவர்களின் அறிவியலுக்கு எதிராக செயற்பட்டபோது அதற்கு எதிர்வினையாகும் முகமாக வெளிப்பட்ட ஒரு நிகழ்வாக உள்ளது. இஸ்லாமிய கோட்பாட்டின் நடைமுறையும் சீரிய தன்மையும் காரணமாக இஸ்லாமிய உலகானது இவ்வாறான சிக்கலை ஒரு போதும் எதிர்கொள்ளவில்லை.... More

ஒரு முஸ்லிமிடம் ஜனநாயகத்தைவிடவும் அதி சிறந்த ஷுரா அமைப்பொன்றுள்ளது.... More

குற்றவியல் தண்டனையானது இந்தப்பூமியில் குழப்பம் விளைவிக்க நாடி அட்டகாசங்கள் புரிவோரைத் தண்டித்து அவர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவே இயற்றப் பட்டுள்ளது. ஆனால் இந்தத் தண்டனைகள் பல்வேறு சூழ்நிலைகளின் போது ரத்துச் செய்யப்பட்டதாக மாறிவிடுகிறது. தவறாக ஒருவரைக் கொல்லுதல், பசி மற்றும் பட்டினியின் காரணமாக களவெடுத்தல் போன்றன தண்டனை ரத்துச் செய்யப்பட்டதாக மாறும் சில நிலைகளாகும். அதே போன்று குழந்தை, புத்திபேதலித்தோர், மனநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கும் தண்டனைகள் அமுல்படுத்தப் படமாட்டாது. இக்குற்றவியல் தண்டனைகள் யாவும் அடிப்படையில் சமூகத்தை பாதுகாப்பதற்கேயாகும். இத்தண்டனைகள் மிகவும் கடுமையானதாக இருப்பது சமூகத்தைப் பாதுகாக்கும் உண்ணத நலனோடு தொடர்பானதாகும். எனவே இஸ்லாமிய சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் இதுகுறித்து மகிழ்ச்சியடைய வேண்டும். இவ்வாறான தண்டனைகள் இருப்பது மனிதர்களுக்கான மிகப்பெரும் அருளாகும். இதன் மூலமே அவர்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கிறது. இந்த குற்றவியல் தண்டனைகளை தங்களது உயிர்களுக்குப் ஆபத்து வந்து விடும் என்ற பயத்தில் குற்றவாளிகளும், கொள்ளையர்களும், குழப்பக்காரர்களுமே குறுக்கீடு செய்து எதிர்க்கின்றனர். மரண தண்டனை போன்ற இஸ்லாமிய தண்டனைகளுள் பல மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களிலும் காண்படுகின்றன.... More

செல்வம் அல்லாஹ்வுக்குரியது, அதன் பிரதிநிதிகளாகவே மக்கள் உள்ளனர் என்பது இஸ்லாத்தில் பொது விதிகளில் -கோட்பாடுகளில் ஒன்றாகும். அதே போன்று செல்வமானது பணம் படைத்தவர்களிடம் மாத்திரம் சுழன்றுகொண்டிருப்பதும் கூடாது. ஸகாத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சாதாரன விகிதத்தை செலவு செய்யாது செல்வத்தை சேமிப்பதை இஸ்லாம் தடுத்துள்ளது. ஸகாத் என்பது ஒரு வணக்கமாகும். அது கஞ்சத்தனம், உலோபித்தனம் ஆகிய குணங்களை களைந்து ஈதல் மற்றும் கொடை கொடுத்தல் போன்ற உயரிய பண்புகள் குடிகொள்ள வகைசெய்கிறது.... More

உதாரணமாக இஸ்லாம், முதலாளித்துவம் மற்றும் சோசலிசத்தில் உள்ள பொருளாதார முறைகளை –கோட்பாடுகளை- ஒரு எளிமையான ஒப்பீடொன்றின் மூலம், இஸ்லாம் இந்த சமநிலையை எவ்வாறு அடைந்தது கொண்டது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.... More

உண்மையில் தீவிரவாதம், கடும்போக்கு, பிடிவாதம் போன்ற பண்புகளை அடிப்படையில் சத்திய மார்க்கமான இஸ்லாம் தடை செய்துள்ளது. அல்குர்ஆனின் அதிகமான வசனங்கள் பிறருடன் உறவாடும் போது மென்மை மற்றும் கருணையை கடைப்பிடிக்குமாறும், மன்னிப்பு, சகிப்புத் தன்மை போன்ற பண்புகளை அணிகலனாகக் கொள்ளுமாறும் தூண்டுகிறது.... More

அடிப்படையில் மார்க்கமானது, மக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கவே வந்துள்ளது. உதாரணத்திற்கு, இஸ்லாத்திற்கு முன்னுள்ள ஜாஹிலிய்யாக் காலத்தை நாம் அவதானித்தால் பெண்குழந்தையை உயிரோடு புதைத்தல், உணவுகளில் சில ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், பெண்களுக்கு தடுக்கப்பட்டதாகவும் இருந்ததோடு, அனந்தரச் சொத்து பெண்களுக்கு வழங்கப்படாமை, இவைகளுடன் தானாகசெத்த மிருகங்களை சாப்பிடுதல், விபச்சாரம், மது அருந்துதல், அநாதைகளின் செல்வத்தை உண்ணுதல், வட்டி போன்ற மாபாதகமான மோசமான செயல்கள் பரவிக் காணப்பட்டன.... More

"நபியே! நீர் உமது மனைவிகளுக்கும், உமது மகள்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில் போட்டு) இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால், அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்". (அல் அஹ்ஸாப்: 59). تقدم... More

தலையை திறப்பதே பிற்போக்காகும். உண்மையில் தலையை மறைத்தல் பிற்போக்குவாதம் என்றிந்தால் முதல் மனிதர் ஆதம் அவர்களின் காலத்தையும் அவ்வாறுதான் குறிப்பிடவேண்டுமல்லவா? காரணம் ஆதமையும் அவரின் மனைவியையும் இறைவன் படைத்து சுவர்க்கத்தில் குடியிருக்க செய்தது முதல் அவர்களுக்கு மறைத்தலையும் ஆடை அணிவதையும் உத்தரவாதப்படுத்தினான்.... More

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உள்ளார்ந்த உடல் வேறுபாடுகளை உலகம் ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆண்களுக்கான நீச்சல் உடைகள் மேற்கத்திய பெண்களுக்கான நீச்சலுடைகளிலிருந்து வேறுபடுகின்றன. ஆண்களின் ஈர்ப்பைவிட்டும்-கவர்ச்சிக்குள்ளாகாது- தம்மை தடுத்துக் கொள்ளும் முகமாக பெண்கள் தங்கள் உடலை முழுவதுமாக மறைக்கிறார்கள். ஒரு பெண் ஒரு ஆணை பாலியல் பலாத்காரம் செய்த நிகழ்வொன்றை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மேற்கத்திய நாடுகளில் பெண்கள் துன்புறுத்தல் மற்றும் கற்பழிப்புக்கு உட்படாது பாதுகாப்பான வாழ்வுக்கான உரிமைகளைக் கோரி போராட்டங்களில் பங்கேற்கின்றனர். ஆனால் இதுபோன்ற போராட்டங்களை ஆண்கள் நடத்தியதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லையே! ஏன் சிந்திப்போமா?... More

முஸ்லிம் பெண், சமத்துவத்தை அல்லாது, நீதியையே தேடுகின்றாள்- ஏனெனில் ஆணுடான சமத்துவம் பெரும்பாலும் அவளின் உரிமைகளையும் தனித்துவத்தையும் இழக்கச் செய்து விடுகிறது. ஒருவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவருக்கு ஐந்து வயது, மற்றவருக்கு பதினெட்டு வயது. அந்த நபர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சட்டை வாங்க விரும்புகிறார். இந்த விடயத்தில் சமத்துவம் என்பது இருவருக்கும் ஒரே அளவிலான சட்டையை வாங்குவதைக் குறிக்கும். அவ்வாறு அவர் சமத்துவமாக நடந்து கொள்ள வெண்டும் என்பதற்கு ஒரே அளவிளான சட்டையை வாங்கினால் அவர்களுககு சிரமத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இங்கே ஒவ்வொருவருக்கும் தகுந்த அளவு சட்டை வாங்கிக் கொடுப்பதே நீதியாகவும் அனைவரினதும் மகிழ்ச்சியை உறுதி செய்வதாகவும் அமையும்.!.... More

சர்வதேச புள்ளிவிவரங்களின்படி, ஆண்களும் பெண்களும் சுமாராக சமமான விகிதத்தில் பிறக்கிறார்கள். பெண் குழந்தைகள் உயிர் பிழைப்பதற்கும் உயிர்வாழ்வதற்கும் ஆண்களை விட வாய்ப்புகள் அதிகம் என்பது அறிவியல் பூர்வமாக யாவரும் அறிந்த விடயமாகும். போர்க் காலங்களில் ஆண் இறப்பு விகிதம் பெண்களை விட அதிகமாக இருக்கும். பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களை விட அதிகமாக உள்ளது என்பதும் அறிவியல் ரீதியாக அறியப்பட்ட ஒரு விடயமாகும். இதன் விளைவாக மனைவியை இழந்த விதவை ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களிடையே விதவைகளின் சதவீதம் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக, உலக மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்ற முடிவுக்கு வருவோம். எனவே, ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு மனைவி என்று வரையறுப்பது நடைமுறையில் பொருத்தமான விடயமல்ல.!... More

நவீன சமுதாயத்தில் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு மிக முக்கியமான விடயங்களில் ஒன்று ஆண்களுக்கு வழங்கப்படாத, பெண்களுக்கு மாத்திரம் இஸ்லாம் வழங்கிய உரிமை பற்றியதாகும். ஒரு ஆண் தனது திருமணத்தை திருமணமாகாத பெண்களுடன் மாத்திரம் வரையறுத்துக்கொள்வான். மறுபுறம், ஒரு பெண், திருமணமாகாத ஆண் ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாம், அல்லது அவர் ஏலவே திருமணமான ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாம். அதாவது குழந்தைகளின் பரம்பரையை அவர்களின் உண்மையான தந்தைக்கு உறுதிப்படுத்தவும், மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் பெற்றோரிடமிருந்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனந்தரச் சொத்துக்களை பாதுகாக்கவும் இவ்வாறு செய்யப்படுகிறது. இருப்பினும், இஸ்லாம் ஒரு பெண் திருமணமான ஆணை அவனுக்கு நான்கு மனைவிகளுக்குக் குறைவாக இருக்கும் நிலையில் திருமணம் முடிக்க அனுமதி வழங்கியுள்ளது, ஆனால் அந்த ஆண் மனைவியரிடத்தில் நீதம் பேணல் மற்றும் அதற்கான இயலுமை (சக்தி) போன்ற நிபந்தனைகள பெற்றிருக்க வேண்டும். எனவே, ஆண்கள் மத்தியில் பெண்களுக்கு பரந்த அளவிலான தேர்வுகள் உள்ளன. மற்ற மனைவி எப்படி நடத்தப்படுகிறாள் என்பதைப் பற்றி அறிந்துகொள்ளவும், இந்தக் கணவனின் நெறிமுறைகளைப் பற்றிய அறிவுடன் திருமண பந்தத்தில் இணைவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.... More

இஸ்லாத்தில் ஆண்கள் பெண்களை நிர்வகிக்கும் தகுதியை பெற்றிருப்பது என்பது பெண்களுக்கான மரியாதையையும் (கௌரவத்தையும்), ஆண்களுக்கான பொறுப்பையையுமே காட்டுகிறது. அதாவது பெண்களின் விவகாரங்களைக் பொறுப்பேற்று, கவனித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியை ஆண்கள் செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் அரசி எனும் வகிபாகத்தை ஒரு முஸ்லிம் பெண் அடைந்து கொள்கிறாள். புத்திசாலித்தனமான பெண் தான் ஒரு மரியாதைக்குரிய அரசியாகவா அல்லது வாழ்க்கைப் பாதையில் கடின உழைப்பாளியாகவா இருக்க வேண்டும் என்பதைத் அவளே தேர்ந்தெடுப்பாள்.... More

இஸ்லாம் வருவதற்கு முன்பு பெண்களுக்கு வாரிசுரிமை பறிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இஸ்லாம் வந்தபோது, வாரிசுரிமையில் பெண்களையும் உள்ளடக்கியது. உண்மையில், அவர்கள் ஆண்களுடன் ஒப்பிடும்போது சமமான அல்லது அதிக பங்குகளைப் பெறுகிறார்கள். சில சந்தர்ப்பங்களில், பெண்கள் வாரிசுப்பங்குகளை பெரும் நிலையில் அவை ஆண்களுக்கு கிடைக்காத சந்தர்ப்பங்கள் உண்டு. அதாவது அந்நிலைகளில் பெண்களே வாரிசுப்பங்குகளைப் பெறுகின்றனர். குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வேறு சில நிலைகளில் உறவு முறை மற்றும் பரம்பரை ரீதியிலான நெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்கள் வாரிசுத் சொத்தில் அதிக விகிதத்தைப் பெறுவர்.... More

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு பெண்ணையும் அடிக்கவில்லை. அடிப்பதைப் பற்றி குறிப்பிடும் அல் குர்ஆன் வசனம், பெண்ணின் கீழ்ப்படியாமை (மாறுபாட்டை) (நுஷூஸ்) போன்ற சந்தர்ப்பங்களில் உடல் ரீதியான எவ்விதக் காயமும் ஏற்படாது தண்டிப்பதையே இது குறிக்கிறது. இந்த வகையில் அடிப்பதானது அமெரிக்காவின் சட்டத்தின் படி எந்தவொரு உடல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில் இது ஒரு அனுமதிக்கப்பட்ட ஒழுங்குமுறை என விவரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய தீங்கைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாகும். அதாவது இந்த விவகாரமானது ஒரு முக்கியமான பரீட்சையை தவறவிடாமல் இருக்க, ஆழ்ந்த உறக்கத்திலிருந்து குழந்தையின் தோளை அசைப்பது போன்றது.... More

இஸ்லாம், ஏனைய மத நம்பிக்கைகளில் உள்ளது போன்று ஆதமின் பாவச் சுமையை சுமப்பதில் இருந்து பெண்களுக்கு விலக்கு அளித்து கௌரவித்தது மாத்திரமின்றி, அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளது.... More

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனையை வலுப்படுத்தியதில் யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களிக்கிடையே தெளிவான உடன்பாடு உள்ளது. (பழைய ஏற்பாடு, லேவியராகமம் 20:10-18). تقدم... More

மக்களிடம் நீதியை நிலைநாட்டுமாறும் அளவை நிறுவைகளில் நியாயம் பேணுமாறும் இஸ்லாம் அழைப்பு விடுக்கிறது.... More

"(நபியே!) உமது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும், தாய் தந்தைக்கு உபகாரம் புரியும் படியும் கட்டளையிட்டிருக்கிறான். உம்மிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்ட போதிலும் அவர்களை விரட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ' என்றும் சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுவீராக. அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! மேலும், ‘‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்றும் பிரார்த்திப்பீராக!".(அல் இஸ்ரா :23, 24). تقدم... More

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன் என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். அப்போது அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் எவனுடைய தீங்கிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவன்தான் என்று பதிலளித்தார்கள்".(புஹாரி, முஸ்லிம்). تقدم... More

"பூமியில் ஊர்ந்து திரியக்கூடியவையும், தன் இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவையும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) தவிர வேறில்லை. (இவற்றில்) ஒன்றையுமே (நம் பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை. பின்னர், (ஒரு நாளில்) இவையும் தங்கள் இறைவனிடம் கொண்டு வரப்படும்".(அல் அன்ஆம் : 38 ). تقدم... More

"(மனிதர்களே! சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு), பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு நீங்கள் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! மேலும், அச்சத்துடனும் ஆவலுடனும் அல்லாஹ்வை அழையுங்கள்! திண்ணமாக, அல்லாஹ்வின் அருள் நன்னடத்தையுள்ள மக்களுக்கு அருகில் இருக்கிறது". (அஃராப் : 56). تقدم... More

சமூகக் கடமைகள் யாவும் அன்பு, இரக்கம் மற்றும் பிறருக்கு மரியாதை செய்தல் என்ற அடித்தளத்தில் கட்டமைக்கப்பட வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத்தருகிறது.... More

அனாதைகளை ஆதரிக்குமாறு இஸ்லாம் ஊக்குவிப்பது மாத்திரமின்றி, தங்கள் சொந்த குழந்தைகளை நடத்துவது போல் அவர்களை நடத்துமாறும் அனாதை பாதுகாவலரை வலியுறுத்துகிறது. இருப்பினும், தந்தையின் அனந்தரச்சொத்தில் அவ்வநாதைக்குரிய பங்கை பாதுகாக்கவும், பரம்பரை கலப்பை தவிர்ப்பதற்காகவும் அநாதைகள் தங்கள் உண்மையான குடும்பத்தைக் கண்டறியும் உரிமை உண்டு.... More

இறைச்சி புரதச்சத்தைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படையாகும். மேலும் மனிதர்களுக்கு தட்டையான மற்றும் கூர்மையான பற்கள் உள்ளன, அவை இறைச்சியை மெல்லவும் அரைக்கவும் ஏற்றாற் போல் அமைந்துள்ளது. தாவரங்களையும், விலங்குகளையும், சாப்பிடுவதற்கு ஏற்ற விதமாக பற்களை அல்லாஹ் மனிதர்களில் படைத்துள்ளான். மேலும் தாவர மற்றும் விலங்கு சார் உணவுகளை ஜீரணிக்கக்கூடிய செரிமான அமைப்பை உருவாக்கியுள்ளான். இவை யாவும் தாவரங்கள் மற்றும் மாமிசங்கள் உட்கொள்ளப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான சான்றாக அமைந்துள்ளது.... More

கூர்மையான கத்தியினால் அறுவைமிருகத்தின் உணவுக் குழாயையும், மூச்சுக் குழாயையும் மிக வேகமாக வெட்டி விடுவதே இஸ்லாத்தின் அறுப்பு முறையாகும். இந்த முறை மிருகங்கள் நோவினைப்படுவதற்கு காரணமாக அமையும் மின்அதிர்வு, மற்றும் கழுத்தை நெரித்துக் கொல்லல் போன்ற வழிமுறைகளை விடவும் கருணை நிறைந்தது. மூளைக்கான இரத்த ஓட்டம் தடைபட்டால், விலங்கு வலியை உணராது. ஒரு மிருகம் அறுக்கப்படும்போது ஏற்படும் துடிப்புக்கு வலி காரணம் அல்ல, மாறாக இரத்தத்தின் விரைவான வெளியேற்றமே இதற்கான காரணமாகும். இவ்வாறு துடிப்பது உடலில் இருந்து இரத்தம் முழுமையாக வெளியேற உதவுகிறது. இது விலங்குகளின் உடலுக்குள் இரத்தத்தை உரைய வைக்கும் ஏனைய அறுப்பு முறைகளுக்கு மாற்றமானது. இரத்தம் வெளியேறாத நிலையில் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியை புசிப்போரின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்டும்.... More

விலங்குகளின் உயிருக்கும் மனிதர்களின் உயிருக்கும் மிகப்பெரும் வேறுபாடு உள்ளது. ஒரு விலங்கின் உயிரானது அதன் உடலை இயக்கும் உந்து சக்தியாகும். அது மரணத்தின் மூலம் வெளியேறும் போது, உடல் உயிரற்றதாகி, வெறும் சடலமாக மாறிவிடுகிறது. அதாவது இது வாழ்க்கையின் ஒரு பகுதியைக் குறிக்கிறது. தாவரங்கள் மற்றும் மரங்கள் கூட வாழ்க்கையின் வடிவத்தைக் கொண்டுள்ளன. ஆனால் அது ஒரு உயிர் என்று குறிப்பிடப்படவில்லை. மாறாக, தண்ணீரின் உதவியுடன் அதன் உற்பகுதி வழியாக ஓடுவதனால் உயிர் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் தண்ணீர் இல்லாமல் போனால் செடி வாடி விழுந்துவிடும்.... More

அல்லாஹ் எமக்கு ஆரோக்கியமான, நல்லனவற்றை சாப்பிடுவதற்கு அனுமதித்து, ஆரோக்கியமற்ற அருவருப்பானவற்றை சாப்பிடுவதற்கு தடை விதித்தமை படைப்பினங்களுடனான அவனின் கருணை மற்றும் அன்பின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.... More

இஸ்லாத்தில் பணம் என்பது வர்த்தகம், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பரிமாற்றம், அத்துடன் கட்டுமானம் மற்றும் நிர்மாணம் போன்றவற்றிக்கு பயன்படுத்தும் ஒரு அதிகாரம் அளிக்கப்பட்ட அடையாள அலகாகும். அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடன் கொடுக்கும்போது, அதன் அடிப்படை நோக்கங்களான பரிவர்த்தனை மற்றும் மேம்பாடு எனும் வழிமுறையிலிருந்து தவிர்த்து, அதையே ஒரு குறிக்கோளாக மாற்றுகிறோம். அதாவது பணத்தை கொடுத்து பணத்தை மேலதிகமாக பெரும் ஒரு வழிமுறையாக மாற்றிவிடுகிறோம்.... More

இறைவன் மனிதனை பகுத்தறிவின் மூலம் ஏனைய படைப்பினங்களை விடவும் தனித்துவமானவனாக ஆக்கியுள்ளான். ஆகையால் அவன் எமது உடலுக்கும் பகுத்தறிவிற்கும் பாதிப்பை ஏற்படுத்துபவைகளை தடை செய்துள்ளான். இதனால் போதையை ஏற்படுத்தக் கூடிய அனைத்தையும் தடைசெய்துள்ளான். காரணம் அது புத்தியை மறைத்து அதில் பாதிப்பை ஏற்படுத்தி பல வகையான கேடுகளுக்கும் வழிவகுக்கும். மதுஅருந்தியவன் சிலவேளை இன்னொருவனை கொன்று விடமுடியும். சிலவேளை விபச்சாரம் செய்வான், சில வேளை களவெடுப்பான். இவ்வாறான மாபாதகச் செயல்கள் மது குடித்ததன் விளைவாக ஏற்படும்.... More

படைப்பாளன் ஒருவன் என்றும் அவனை மாத்திரமே வணங்கி வழிப்படுவது என்றும், முஹம்மத் அவனின் அடியாரும் தூதருமாவார் என ஒப்புக்கொண்டு சான்று பகர்வதாகும்.... More

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்றாக தொழுகையை ஆக்கி, தொழுமாறு கட்டளையிட்ட தனது இரட்சகனுக்கு கடடுப்பட்டு நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு முஸ்லிம் தொழுகையை நிறைவேற்றுகிறான்.... More

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவன் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளை பின்பற்றுபவன் என்ற வகையில் தனது தூதரும் தீர்க்கதரிசியுமான முஹம்மத் தொழுதது போன்று தொழுவான்.... More

'அல்லாஹ்; புனித ஆலயமான கஃபாவை முதல் வழிபாட்டு தளமாகவும், விசுவாசிகளின் ஒற்றுமையின் அடையாளமாகவும் ஆக்கினான். இது தொழுகையின் போது அனைத்து முஸ்லிம்களும் முன்னோக்கும் திசையாகும். மக்காவை மையமாகக் கொண்டு இந்தப் பூமியில் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் இதனைச்சூழ இணைகின்றனர். இறை வழிபாட்டாளர்கள் தங்களைச் சுற்றியுள்ள இயற்கையுடன் தொடர்பு கொள்ளும் பல காட்சிகளை குர்ஆன் நமக்கு முன்வைக்கிறது. இதற்கு நபி தாவூதுடன் மலைகளும் பறவைகளும் இறைவனை துதிசெய்தது ஆதாரமாக அமைகிறது. ''நிச்சயமாக நாம் தாவூதிற்கு நம்மிடமிருந்து அருளை வழங்கினோம். மலைகளே பறவைகளே! அவருடன் சேர்ந்து துதிசெய்யுங்கள். மேலும் நாம் அவருக்கு இரும்பை எளிதாக்கிக் கொடுத்தோம்''. (ஸபஃ : 10). இஸ்லாம் அதிகமான இடங்களில் இப்பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள படைப்பினங்கள் யாவும் அகிலத்தின் இரட்சகனை துதிசெய்து மகிமைப்படுத்துகின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன. அல்லாஹ் கூறுகிறான் : تقدم... More

கஃபா ஆலயம் தொடர்பான குறிப்புகள் வரலாறு முழுதும் அதிகமாக இடம்பெற்றுள்ளன. அரேபிய தீபகற்பத்திற்கு அப்பால் தொலைத்தூரத்திலிருந்து இதனை தரிசிப்பதற்காக மக்கள் வருடம் தோரும் வருகை தந்திருந்தனர். அத்துடன் முழு அரேபியத் தீபகற்பத்தில் உள்ளோரும் இதனைப் புனிதப்படுத்துகின்றனர். கஃபா குறித்து பழைய ஏற்பாட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது: 'பாக்கா பள்ளத்தாக்கைக் கடந்து, அவர்கள் அதை நீரூற்றுகளின் இடமாக மாற்றுகிறார்கள்'. (பழைய ஏற்பாடு, சங்கீதம் 84).... More

சிலைவழிபாட்டு மதங்களுக்கும் குறிப்பிட்ட சில இடங்கள், மற்றும் சடங்குகளை சிறப்பிப்பதற்குமிடையே பாரிய வேறுபாடுகள் உண்டு. அவை மத அல்லது தேசிய அல்லது கலாச்சாரமாக இருந்தாலும் சரியே!... More

'முஸ்லிம் ஹஜருல் அஸ்வதை வணங்காதிருப்பின் அதனை ஏன் முத்தமிடவேண்டும்?. குறிப்பு: கறுப்புக் கல் (Black Stone, Hajarul Aswad, அரபு மொழி: الحجر الأسود‎) என்பது சவூதி அரேபியாவின் மக்கா நகரில் பெரிய பள்ளிவாசல் நடுவில் அமைந்துள்ள கஃபா எனும் கட்டடத்தின் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கல் ஆகும். இது இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி ஆதம், ஹவ்வா ஆகியோரின் காலத்திருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட சின்னமாகும். இந்தக் கல் (முஹம்மது நபியின்) பிறப்புக்கு முன்னே, இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதல் போற்றப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி கறுப்புக் கல் என்பது முஹம்மது நபியினால் கிபி 605 ஆம் ஆண்டு கஃபாவின் சுவருடன் இணைத்து அமைக்கப்பட்டது. கிபி 605 இற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பல துண்டுகளாக உடைக்கப்பட்ட இந்தக் கல் தற்போது காபாவின் ஓரத்தில் ஒரு வெள்ளி சட்டத்தினால் சாந்திடப்பட்டுள்ளது. முஹம்மது நபி வழிமுறையைப் பின்பற்றி இன்றும் முஸ்லிம் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில் கஃபாவைச் சுற்றி வந்து தவாப் செய்யும் போது இக்கல்லை ஆர்வத்துடன் முத்தமிடுவார்கள். ((விகிபீடியா).

உதாரணத்திற்கு தனது தந்தையிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு கடிதத்தின் உரையை ஒரு நபர் முத்தமிடுகிறார் என்றால் அவரை நாம் குறைகூறுவோமா? மாட்டோமல்லவா?! இதே போன்றுதான் ஹஜருல் அஸ்வத் கல்லின் நிலையும் என்பதையும் மனம் கொள்ள வேண்டும்.! ஹஜ்ஜின் அனைத்து கிரியைகளும் அல்லாஹ்வை நினைவு கூறுவதையும், அகிலங்களின் இரட்சகனுக்கு அடி பணிந்து வழிபடுதலையும் குறித்துக்காட்டுவதுடன் அதனையே இலக்காகவும் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக அவர்கள் கற்களையோ, இடங்களையோ அல்லது தனி நபர்களையோ வணங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. (هذه الترجمة متكررة. ينظر : 1839) அதே வேளை வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கிடையே உள்ள அனைத்தினதும் இரட்சகனும், எல்லாவற்றையும் படைத்தவனும், அவற்றின் இறையாண்மையும் கொண்ட ஒரே கடவுளை வணங்குவதற்கு இஸ்லாம் அழைப்பு விடுக்கிறது. هذا أيضا متكرر. ينظر رقم 1840)... More

ஹஜ்ஜில் நெரிசல் காரணமாக குறிப்பிட்ட சிலவருடங்களில் மாத்திரமே மரணசம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் வழமையில் நெரிசல் காரணமாக மரணமடைவோரின் தொகை மிகவும் குறைவானதாகும். ஆனால் உதாரணத்திற்கு குறிப்பிடுவோமாயின் நாம் மது அருந்துவதன் விளைவாக இறக்கும் நபர்களை கணக்கிட்டால் அவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பல மில்லியன்கலாகும். அதுமாத்திரமின்றி தென் அமெரிக்காவில் கால்பந்து அரங்கங்கள் மற்றும்; திருவிழாக்களில் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை இதை விட அதிகமாகும்! என்பதை கருத்திற்கொள்ள வேண்டும். எப்படியிருந்தாலும், மரணம் தவிர்க்க முடியாத மாபெரும் உண்மையாகும், இறைவனை சந்திப்பது அது போன்ற உண்மையாகும். ஆகவே பாவத்தில் இறப்பதை விட நற்காரியத்தில் இறப்பது மிகவும் சிறந்தல்லவா!... More

அல் குர்ஆனில், இறைவனின் கருணையையும், அடியார்கள் மீது கொண்ட அன்பையும் குறிக்கும் பல வசனங்கள் உள்ளன. இருப்பினும், இறைவன் தம்முடைய அடியானிடம் அன்பு செலுத்துவது மக்கள் தங்களுக்கு மத்தியில் அன்பு பாராட்டிக்கொள்வது போன்றது அல்ல. ஏனென்றால் மனித அளவுகோளின் படி ஒரு காதலன் தான் இழந்த தேவையை காதலியிடமே பெற்றுக்கொள்கிறான். ஆனால் அல்லாஹ், எம்மில் எவ்விதத் தேவையுமற்றவன். அவன் நம்மீது கொண்ட அன்பானது பாசமும் அருளுமாகும். பலமானவன் பலவீனமானவனை விரும்புவது, வசதி படைத்தவன் ஏழைகள் மீது நிறைந்த அன்பு காட்டுவது, ஒரு பலசாலி ஆதரவற்றவரிடம் அன்பு காட்டுவது போன்ற நிலைக்கு ஒப்பானதாகும்.... More

"லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பிவைத்தோம்.) அவர் தம் மக்களை நோக்கி ‘‘உங்களுக்கு முன்னர் உலகத்தில் எவருமே செய்திராத மானக்கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கிறீர்கள்?. நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கிறீர்கள். நீங்கள் மிக்க வரம்பு மீறிய மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார். இவர்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றுங்கள்' இவர்கள்தாம் மிக்க பரிசுத்தமான மனிதர்களாயிற்றே' என்று கூறியதைத் தவிர வேறெதுவும் அவரது சமூகத்தாரின் பதிலாக இருக்கவில்லை''. (அல்-அராஃப்: 80-82). تقدم... More

மனித இயல்பையும், பலவீனத்தையும் கருத்தில் கொண்டு, விடாப்பிடியாக இன்றி பாவம் செய்வோரை அவர்கள் மனந்திருந்தி மன்னிப்புக் கோரினால் இறைவன் மன்னிப்பவனாகவும் அவர்களுடன் இரக்கமுள்ளவனாகவும் இருக்கிறான். இதில் இறைவனை சவாலுக்குட்படுத்துவது என்பது கிடையாது. இருப்பினும், இறைஇருப்பை மறுத்து, தன்னை சிலைகள் அல்லது விலங்குகளின் வடிவில் சித்தரிப்போரை, அல்லது மனந்திருந்தாமல் பாவச்செயல்களில் விடாப்பிடியாக நிலைத் திருப்பவர்களை கடுமையாக தண்டிப்பான். ஒருவன் மிருகத்தை அவமதித்தால், யாரும் அவனை குறை கூற மாட்டார்கள், ஆனால் அவர்கள் பெற்றோரை அவமதித்தால், அவர்கள் கடுமையாக கண்டனத்துக்கு ஆளாகுவார். அப்படியாயின், இந்த சமன்பாட்டை அவமதிப்பை படைப்பாளனான இறைவன் விவகாரத்தில் பிரயோகித்தால்;? அது இதை விட மிகப்பெரும் குற்றமல்லவா?! ஆகையினால் நாம் பாவத்தை சிறியதாக கருதக்கூடாது. மாறாக யாருக்கு மாறு செய்கிறோம் என்பதைத்தான் நாம் அவதானிக்க வேண்டும்.... More

தீமையானது இறைவன் புறத்திலிருந்து வருவதில்லை. தீமைகள் அடிப்படையில இருப்பியல் சார்ந்த விடயமல்ல. ஆக, இருப்பானது நன்மையின் மொத்த வடிவமாகும்.... More

இறைவன் பௌதீக விதிகளையும் அவற்றை நிர்வகிக்கும் கோட்பாடுகளையும் வைத்துள்ளான். இப்பிரபஞ்சத்தில் முறைகேடு அல்லது சுற்றுச்சூழல் கோளாறு ஏற்பட்டால் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்கின்றது. அத்துடன் பூமியில் சீர்திருத்தமும் மிகச் சிறந்த வாழ்வும் தொடர வேண்டும் என்ற நோக்கில் இந்த சமநிலையின் இருப்பை அது பேணிப்பாதுகாக்கிறது. மக்களுக்கும் வாழ்க்கைக்கும் நன்மையளிப்பவை –பயனளிப்பவை மாத்திரமே எஞ்சியிருக்கும். ஏனையவை அழிந்துவிடும். பூமியில் பேரழிவுகள் ஏற்படும் போது நோய்கள், எரிமலைகள், பூகம்பம், வெள்ளம் போன்றவைகளால் , மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில், இறைவனின் திருப் பெயர்களான வலிமைமிக்கவன், குணப்படுத்துபவன் பாதுகாப்பாளன் போன்ற பெயர்கள் பிரதிபலிக்கின்றன. அதாவது நோயாளியை குணப்படுத்துவதிலும், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பதிலும் அவனின் உயரிய திருநாமங்கள் வெளிப்படுகின்றன. அதேபோல், நீதியாளன் எனும் அவனின் திருநாமமானது பிறருக்கு அநியாயம் செய்தவன், மற்றும் பாவியை தண்டிப்பதிலும் வெளிப்படுகிறது. அதே நேரத்தில் அவன் ஞானமிக்கவன் எனும் திருநாமமானது பாவியல்லாதோரை சோதிப்பதில் பிரதிபலிக்கிறது. அதாவது ஒருவன் இறைவனின் சோதனையில் பொறுமை காத்தால் அவனுக்கு வெகுமதி வழங்கியும், யார் அவனின் சோதனையில் வெறுப்போடு நடந்து கொள்கிறானோ அவனுக்கு தண்டனை வழங்குவதன் மூலமும் கூலி வழங்குவதாகும். ஒரு மனிதன் தனது இரட்சகனின் அழகிய கொடைகளை –வெகுமதிகளை அறிந்து கொள்வது போல், இந்த சோதனைகள் மூலம் அவனது மகத்துவத்தையும் தெரிந்து கொள்கிறான். இறைவனின் அழகிய இறை பண்புகளை அறிந்து கொள்வதால் மாத்திரம் அவனை அறியமுடியாது மாறாக ஏனைய எல்லாப் பண்புகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.... More

இவ்வுலக வாழ்க்கையில் தீமைகள் இருப்பதற்கான காரணம் குறித்து கேள்வி கேட்பவர் கடவுளின் இருப்பை மறுப்பதற்கு நியாயம் தேடுவதையே நோக்காகக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவருடைய குறுகிய பார்வையையும் அதன் பின்னால் உள்ள ஞானத்தைப் பற்றிய அவரது சிந்தனையின் பலவீனத்தையும், உள்ளார்ந்த விஷயங்களைப் பற்றிய அறிவின்மையையும் நமக்கு வெளிப்படுத்துகிறார். மேலும் நாத்திகர் தனது கேள்வியின் மூலம் தீமை விதிவிலக்கு என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.... More

உதாரணத்திற்கு யாராவது ஒருவர் தங்கள் பெற்றோரை புறக்கணித்து, அவமானப்படுத்தி, வீட்டை விட்டு வெளியேற்றி, அவர்களை பாதையில் விட்டுவிட்டால் அந்த நபர் குறித்து எப்படி நினைப்போம்?... More

பல குற்றங்கள் சில போது ஆயுள் தண்டனைக்கு வழிவகுக்கும். குற்றவாளி தன் குற்றத்தைச் சில நிமிடங்களில் செய்ததால், ஆயுள் தண்டனை நியாயமற்றது என்று யாராவது கூறுவார்களா? குற்றவாளி ஒரு வருடம் மாத்திரமே பணத்தை கொள்ளை அடித்தான் என்பதற்காக பத்து வருட சிறைத்தண்டனை நியாயமற்ற தீர்ப்பு எனக் கூற முடியுமா? குற்றங்களுக்கான தண்டனைகள் காலத்துடன் தொடர்புடையவை அல்ல, மாறாக அக்குற்றங்களின் அளவு மற்றும் அவற்றின் கொடிய தன்மையைப் பொறுத்ததாகும்.... More

தாய் தன் பிள்ளைகள் பயணம் செய்யும் போதோ அல்லது வேலைக்குச் செல்லும் போதோ போய் வருகையில் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் நடந்கொள்ளுங்கள் என அவர்களை எச்சரிப்பதன் மூலம் அவர்களை மிகவும் சோர்வுக் குள்ளாக்குகிறாள் என நாம் வைத்துக்கொள்வோம். இவ்வாறான ஒரு தாய் இரக்கமற்ற இருகிய மனம் படைத்தவள் எனக் கருதப்படுவாளா? இங்கு பாசமானது கடுமையின் வெளிப்பாடாக மாறியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே அல்லாஹ்வும் தனது அடியார்கள் மீதான கருணையினால் அவர்களுக்கு நல்லனவற்றை நினைவூட்டி, தீயனவற்றை எச்சரித்து, மீட்சிக்கான வழியை காண்பித்துக் கொடுக்கிறான். மேலும் அவர்கள் தமது பாவங்களிலிருந்து மீண்டு மனந்திருந்தி அவனிடம் முறையிடும் போது அவர்களின் பாவங்களை நன்மைகளாக மாற்றுவதாகவும் வாக்களிக்கிறான். இது அவனின் கருணையின் வெளிப்பாடல்லவா!... More

அல்லாஹ் தனது அடியார்கள் அனைவருக்கும் மீட்சிக்கான வழியை காண்பித்துக் கொடுத்துள்ளான். எனவே அவன் இறைநிராகரிப்பை ஏற்றுக்கொள்வதில்லை. அத்துடன் இறை நிராகரிப்பு மற்றும் பூமியில் குழப்பம் விழைவித்தல் போன்ற மனிதன் செல்லும் பிழையான நடத்தையையும் அவன் விரும்ப மாட்டான்.... More

அகிலங்களின் இரட்சகனை விசுவாசம் கொள்ளுதல் மற்றும் அவனுக்கு கட்டுப்படுதல் ஆகிய இரண்டு விடயங்களையும் நாம் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியம்.... More

மனிதனைப் பொறுத்தவரை அறிவைத் தேடுவதும், இப்பிரஞ்ச அத்தாட்சிகள் குறித்து ஆய்வு செய்வதும் அவனின் உரிமையாகும். இதற்காகவே அல்லாஹ் எமக்கு பகுத்தறிவைத்தந்து அதனை உரிய முறையில் பயன்படுத்துமாறு குறிப்பிடுகிறான். ஒவ்வொரு மனிதனும் தனது மூதாதையர்களின் மார்க்கத்தை குறித்து ஆய்வோ சிந்தனை செய்யாது மொத்தத்தில் பகுத்தறிவை உரிய முறையில் பயன்படுத்தாமலே கண்மூடித்தனமாக பின்பற்றுகிறான். இதனால் அல்லாஹ் அவனுள் வைத்திருக்கும் மாபெரும் அருளான பகுத்தறிவை அற்பமாகக்கருதி தனது ஆன்மாவுக்கு அநியாயம் இழைத்து தன்னையே சிறுமைப்படுத்திக் கொண்டவனாக மாறிவிடுகிறான்.... More

இஸ்லாமியத் தூது கிடைக்கப் பெறாதோரை அல்லாஹ் ஒருபோதும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால் மறுமையில் அவர்கள் சோதனைக்குட்படுத்தப்படுவார்கள்.... More

ஆக வாழ்க்கைப்பயணத்தின் சிறப்பான மற்றும் பாதுகாப்பான முடிவும் மீட்சிக்கான சிறந்த வழியும் பின்வரும் இறைவசனங்களில் சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. அல்லாஹ் கூறுகிறான் :... More